எஸ்டி மாணவர் கைச்செலவு நிதி $8.86 மி.; 13,000 பேர் பலன்

எஸ்டி மாணவர் கைச்செலவு நிதி $8.86 மி.; 13,000 பேர் பலன்

1 mins read
856cad3b-2d6c-4b85-be05-5e9cb9f0a6b6
-

'எஸ்டி பாக்­கெட் மணி' எனப்­படும் பள்ளி மாண­வர் கைச்­செலவு நிதித் திட்­டத்­தின் மூலம் இவ்­வாண்டு 13,000 பேர் பல­ன­டைந்து உள்­ள­னர்.

இவர்­க­ளுக்கு $8,861,222 நிதி உதவி அளிக்­கப்­பட்டு உள்­ளது. 2000ஆம் ஆண்டு இத்­திட்­டம் தொடக்­கம் கண்­டது முதல் இதுவே ஆக அதிக உத­வித்­தொகை. மேலும், கொள்­ளை­நோய் நெருக்­கடி கார­ண­மாக உதவி கேட்டு வந்த விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் இவ்­வாண்டு 25 விழுக்­காடு கூடி­யது.

குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­

க­ளைச் சேர்ந்த குழந்­தை­க­ளுக்கு அவர்­க­ளின் பள்ளி மூலம் கைச்­செ­லவு நிதி வழங்­கும் இந்த நிதி, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழால் சமூ­கத்­திட்­ட­மா­கத் தொடங்­கப்­பட்­டது. இது தொடங்­கப்­பட்­டது முதல், தேவை­யுள்ள சுமார் 180,000 பள்­ளி மாணவர்களுக்கு $80 மில்­லி­ய­னுக்கு மேல் உதவி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

திட்­டப் பய­னா­ளர்­களில் மூவ­ரும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரும் சிங்­கப்­பூர் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நேற்று மதிய விருந்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். அன்பளிப்புப் பைகளும் அவர்களுக்கு வழங்கப் பட்டன.