தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பண நோட்டு புழக்கத்தைக் குறைக்க வலியுறுத்து

1 mins read
754a0ea4-6e91-4a38-b274-af4ccc2e3363
-

வர­வி­ருக்­கும் சீனப் புத்­தாண்­டில் 'ஹோங் பாவ்' அன்­ப­ளிப்­பின்­போது புதிய நாணய நோட்­டு­

க­ளின் பயன்­பாட்­டைக் குறைத்­துக்­கொள்­ளு­மாறு பொது­மக்­களை சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் வலி­யு­றுத்தி உள்­ளது. இவ்­வாறு செய்­வ­தன் மூலம் சுற்­றுச்­ச­சூ­ழ­லுக்கு உத­வு­வ­தோடு புதிய பண நோட்­டு­களை வாங்­கு­வ­தற்­காக வங்­கி­க­ளின் முன் நீளும் வரி­சை­க­ளைக் குறைக்­க­

மு­டி­யும் என்று ஆணை­யம் கூறி­யுள்­ளது. சீனப் புத்­தாண்டு உட்­பட இதர விழாக்­கா­லங்­களில் ஆண்­டு­தோ­றும் கிட்­டத்­தட்ட 100 மில்­லி­யன் புதிய பண நோட்­டு­களை வெளி­யி­டப்­ப­டு­வ­தா­க­வும் இவற்­றில் பெரும்­பா­லா­னாவை

$2 நோட்­டு­கள் என்­றும் நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் ஆணை­யம் குறிப்­பிட்­டது.

சீனப் புத்­தாண்டு முடிந்­த­தும் $2 நோட்­டு­கள் திரும்­ப­வந்­து­

வி­டு­வ­தா­க­வும் வழக்­கத்­திற்கு மீறிய பணப் புழக்­கத்­தைக் குறைக்க அவை அழிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அது தெரி­வித்­தது. புதிய பண நோட்­டு­களை அச்­ச­டிக்க, வெவ்­வேறு இடங்­க­ளுக்கு அவற்­றைக் கொண்­டு­செல்ல, பின்­னர் அவற்றை அழிக்க என்று ஒவ்­வோர் ஆண்­டும் தேவை­யற்ற, வீண்­மு­யற்­சி­கள் நிகழ்­வ­தோடு சுற்­றுச்­சூ­ழ­லுக்கு எதிர்­மா­றான தாக்­கம் ஏற்­ப­டு­வ­தா­க­வும் ஆணை­யம் கூறி­யது. இந்­தப் போக்­கைக் குறைக்க மின்­னி­லக்­கப் பரி­ச­ளிப்பு முறையை உரு­வாக்­கு­வது தொட­ர்பாக நிதித் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளு­ட­னும் சிங்­கப்­பூர் வங்­கி­கள் சங்­கத்­து­ட­னும் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக ஆணை­யம் மேலும் குறிப்­பிட்­டது.