வசதிகுறைந்தோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் சலுகை நீட்டிப்பு

வசதிகுறைந்தோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் சலுகை நீட்டிப்பு

1 mins read
e60873f2-f3e7-48b3-b791-56579b0230a7
விலைக் கழிவை ஓராண்டுக்கு நீட்டித்திருப் தன் மூலம் மூத்தோரும் வசதி குறைந்த குடும்பத்தின ரும் $11 மில்லி யனுக்கு மேல் சேமிக்க முடியும். கொள்ளை நோயால் இத்தகையோர் அதிகம் பாதிக்கப்பட்ட தாக ஃபேர்பிரைஸ் கூறியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூத்­தோ­ருக்­கும் குறைந்த வரு­

மா­னக் குடும்­பத்­தி­ன­ருக்­கும் வழங்­கப்­பட்டு வரும் விலைக்­க­ழிவை மேலும் ஓராண்­டுக்கு நீட்­டித்­துள்­ளது ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டிக் குழு­மம்.

முன்­னோ­டித் தலை­மு­றை­யி­னர், மெர்­டேக்கா தலை­மு­றை­யி­னர் ஆகி­யோ­ருக்­கான திட்­டத்­தில் இடம்­பெற்­றி­ருப்­போ­ரு­டன் சமூக சுகா­தார உத­வித் திட்­டத்­தின் நீளநிற அட்­டை­தா­ரர்­களும் இந்த விலைக் கழிவை பெறு­வர்.

வாரத்­தின் குறிப்­பிட்ட நாள்­களில் ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டி­

க­ளி­லும் யூனிட்டி மருந்­துக்­க­டை­

க­ளி­லும் இவர்­க­ளுக்கு மூன்று விழுக்­காடு கழிவு வழங்­கப்­பட்டு வரு­கிறது.

அடுத்த ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதிவரை நீட்­டிக்­கப்­பட்­டுள்ள விலைக்­க­ழிவு மூலம் இந்­தத் திட்­டத்­தின் வாடிக்­கை­யா­ளர்­கள் $11 மில்­லி­ய­னுக்கு மேல் சேமிக்க முடி­யும்.

2015ஆம் ஆண்டு முதல் இத்­த­கை­யோ­ருக்கு விலைக்­க­ழிவு வழங்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் நீட்­டிப்பு மூலம் தற்­போது $54 மில்­லி­யன் பெறு­மான விலைக்­க­ழிவு கூடு­த­லாக வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் ஃபேர் பிரைஸ் தெரி­வித்­துள்­ளது.

திட்­டம் நீட்­டிக்­கப்­பட்­டி­ருப்­பது பற்றி குறிப்­பிட்ட ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­தின் குழு தலைமை நிர்­வாகி சீ கியன் பெங், கொள்­ளை­நோய் கார­ண­மாக எழுந்த நிச்­ச­ய­மற்ற நில­வ­ரங்­க­ளால் மூத்­தோ­ரும் வச­தி­கு­றைந்­தோ­ரும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அத்தகையோ ருக்கான சமூக ஆதரவின் ஒரு பகுதியே இந்த கழிவு நீட்டிப்பு என்றும் கூறி­னார்.

விலைக்­க­ழிவு வழங்­கப்­ப­டு­

வ­தால் ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­திற்கு இவ்­வாண்டு $10 மில்­லி­யன் வரை செல­வா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.