மூன்று மாதத்தில் 398 இணைய மோசடிக் குற்றங்கள்: தொடர்ந்து அதிகரிப்பதால் விழிப்புடன் இருக்க யோசனை

மூன்று மாதத்தில் 398 இணைய மோசடிக் குற்றங்கள்: தொடர்ந்து அதிகரிப்பதால் விழிப்புடன் இருக்க யோசனை

2 mins read
c2ce8ab6-0d85-4a7a-acf3-652ccf64d4f4
-

மின்­னஞ்­சல், குறுந்­த­க­வல், தொலை­பேசி அழைப்பு என பல்­வேறு வழி­களில் ஆள்­மா­றாட்­டம் செய்து மோச­டி­யில் ஈடு­படும் சம்­ப­வங்­கள் சிங்­கப்­பூ­ரில் அதி­க­ரித்து வரு­வ­தை தான் கவ­னித்து வரு­வ­தாக காவல்­துறை நேற்று அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

இணைய வர்த்­த­கத்­தில் தொடர்­பு­டைய நிறு­வ­னங்­க­ளின் அதி­கா­ரி­கள் என்று கூறி பொது­மக்­க­ளி­டம் பணம் பறிக்­கும் சம்­ப­வங்­கள் அவை. இவ்­வாண்டு அக்­டோ­பர் தொடங்கி இது­நாள் வரை அத்­த­கயை 398 மோச­டிச் சம்­ப­வங்­கள் பதி­வாகி இருப்­ப­தா­க­வும் மோசடி வலை­யில் சிக்­கிய பொது­மக்­கள் $4.5 மில்­லி­யன் அள­வுக்­குப் பறி­கொ­டுத்­தி­ருப்­ப­தா­க­வும் அறிக்கை குறிப்­பிட்­டது.

இணைய வர்த்­தக நிறு­வ­னத்­தில் இருந்து பேசு­வ­தா­கக் கூறும் மோச­டிப் பேர்­வ­ழி­கள், இணை­யத்­தில் பொருள்­கள் வாங்­கி­ய­தற்­கா­கப் பணம் செலுத்­தி­ய­தில் பிரச்­சினை இருப்­ப­தா­கக் கூறு­வர்.

அல்­லது பெரிய பரி­சுத்­தொகை விழுந்­தி­ருப்­ப­தாக அவர்­கள் ஆசை வலை­வி­ரிப்­பர்.

பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண அல்­லது பரி­சுத்­தொ­கை­யைப் பெற வங்­கிக் கணக்கு விவ­ரங்­களை அவர்­கள் கேட்­பர்.

இணை­யம் மூலம் வங்­கிக் கணக்­கைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உள்­நு­ழைவு ரக­சி­யத் தக­வல்­கள், கடன்­பற்று/ரொக்­கக் கழிவு அட்டை விவ­ரங்­கள், ஒரு­முறை வரும் ரக­சி­யக் குறி­யீடு (OTP) போன்­ற­வற்­றைப் பொது­மக்­க­ளி­டம் அவர்­கள் கேட்­டுப் பெறு­வர்.

அது­வரை நம்­பிய பொது­மக்­கள் தங்­க­ளது வங்­கிக் கணக்­கில் முறை­யற்ற பரி­வர்த்­தனை நடந்­தது பற்­றி அறிந்த பின்­னரே தாங்­கள் மோச­டிக்கு ஆளா­கி­ய­தாக உணர்­வர்.

இது­போன்ற மோச­டி­க­ளைத் தவிர்க்க வங்­கிக் கணக்கு விவ­ரங்­கள், கடன்­பற்று/ரொக்­கக் கழிவு அட்டை விவ­ரங்­கள், ஒரு­முறை வரும் ரக­சி­யக் குறி­யீடு போன்ற எதை­யும் யாரி­ட­மும் தரக்­கூ­டாது என்­று காவல்துறை தெரிவித்து உள்ளது.

சந்­தே­கம் ஏற்­ப­டின் சம்­பந்­தப்­பட்ட வங்­கி­க­ளின் அதி­கா­ர­பூர்வ இணை­யத்­த­ளத்­திலோ அல்­லது அதி­கா­ரி­க­ளி­டமோ சரி­பார்த்­துக்­கொள்­வது சிறந்­தது என்­றும் அது யோசனை தெரி­வித்துள்­ளது.