செய்திக்கொத்து

செய்திக்கொத்து

4 mins read
b9a8f788-048f-4b17-bca7-c191d6fa65ec
-

வீட்டுக்குள் மாண்டுகிடந்த முதியவர்

தோ பாயோவில் உள்ள தமது வீட்டில் 63 வயது முதியவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டார். அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டுக்காரர்கள் தெரி வித்ததைத் தொடர்ந்து காவல்துறைக்குத் தகவல் சென்றது.

மாண்டவர் ஸாங் யீ லோங் என அடையாளம் காணப்பட்டதாக ஷின் மின் சீன நாளிதழை மேற்கோள் காட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ெவளியிட்டுள்ளது. அவரது மரணம் பெரும்பாலும் இயற்கையானதாக இருக்கலாம் என்றும் அது தெரிவித்தது.

புளோக் 100 லோரோங் 1 தோ பாயோவில் உள்ள ஒரு வீட்டில் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) பிற்பகல் 2.57 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது. அந்த ஆடவர் அசைவற்றுக் காணப்பட்டதாகவும் அவர் மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர் அறிவித்ததாகவும் அது குறிப்பிட் டது. இந்த மரணத்தில் சதி எதவும் இல்லை என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் விசாரணை தொடருவதாகவும் காவல்துறை கூறியது. தமது தாயாருடன் வசித்து வந்த ஆடவர், கடந்த ஆண்டு தாயார் மறைந்தது முதல் தனியாக இருந்துவந்ததாக அண்டைவீட்டார் கூறினர்.

நாடாளுமன்றம் கூடுகிறது

அடுத்த மாதம் (ஜனவரி) 10ஆம் தேதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் நடை பெறும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று தெரிவித்தார்.

5 வெள்ளியில் தொடங்கி 'பைக்' வரை: வயதோடு வளர்ந்த திருட்டு

பதின்ம வயது முதல் அடி­த­டி­யி­லும் பல்­வேறு திருட்­டு­க­ளி­லும் ஈடு­பட்டு வந்த ஆட­வ­ருக்­கான தண்­டனை விதிப்பு அடுத்த மாதத்­திற்­குத் தள்­ளி­வைக்­கப்­பட்டுள்­ளது. அந்தத் தண்­டனை நேற்று விதிக்கப்பட இருந்­தது. அதற்கு முன்­னர், சீர்­தி­ருத்­தப் பயிற்­சிக்கு அந்த ஆட­வர் தகுதி உள்­ள­வர்­தானா என்­பதை மதிப்­பிட்டு அறிக்கை அளிக்­கு­மாறு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் தமது 16வது வய­தில் கிள­மெண்டி வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு வீட்­டில் $5 ரொக்­கம் திரு­டி­னார். அது அவர் ஈடு­பட்ட முதல் திருட்டு. மூன்­றாண்­டு­களில் மோட்­டார்­சைக்­கிள்­க­ளைத் திரு­டும் அள­வுக்கு அவ­ரது சட்­ட­வி­ரோ­தச் செயல்­கள் அதி­க­ரித்­தன.

இந்த மாதம் 20 வய­தைத் தொட்ட அந்த ஆட­வர், தம் மீது சுமத்­தப்­பட்ட அச்­சு­றுத்­தல் குற்­றம், பல்­வேறு திருட்டுக் குற்­றங்­கள் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய 10 குற்­றச்­சாட்­டு­ களை நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார். இதர 14 குற்­றச்­சாட்­டு­கள் அப்­போது கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன.

நீதி­மன்ற விசா­ர­ணைக்­காக நேற்று அவர் மெய்­நி­கர் வாயிலாகத் தோன்­றி­னார். முதல் குற்­றத்­தில் ஈடு­பட்­ட­போது 16 வயது இளை­யர் என்­ப­தால் அவ­ரைப் பற்­றிய விவ­ரங்­களை நீதி­மன்­றம் வெளி­யி­ட­வில்லை. சீர்­தி­ருத்­தப் பயிற்சி என்­ப­தும் தண்­ட­னை­தான். அதற்­கான மையத்­தில் தடுத்து வைக்­கப்­ப­டு­வோ­ருக்கு உடல்­ரீ­தி­யா­க­வும் மன­ரீ­தி­யா­க­வும் பயிற்சி அளிக்­கப்­படும்.

சீன பொருளியல் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் கைகொடுக்கும்

தற்­சார்பு வளர்ச்சி என்­னும் புதிய பொரு­ளி­யல் உத்­தியை நோக்கி நடை­போ­டும் சீனா­வுக்கு சிங்­கப்­பூர் தனது பங்­கைச் செய்­ய­மு­டி­யும் என சிங்­கப்­பூ­ரின் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார். கிழக்­கா­சிய பெரும் பொரு­ளி­யலை தென்­கி­ழக்­கா­சி­யச் சந்­தை­யு­டன் இணைப்­ப­தில் சிங்­கப்­பூர் சிறப்­பான பங்கை ஆற்­ற­மு­டி­யும் என்­பது அதில் ஒன்று என்­றார் அவர்.

குறிப்­பாக, உலக வர்த்­த­கப்போக்­கை­யும் விநி­யோ­கத் தொட­ரை­யும் மாற்­றி­ய­மைப்­ப­தன் மூலம் இது சாத்­தி­யப்­படும். இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு தொடர்­பாக சீன துணைப் பிர­த­மர் ஹான் ஸெங்­கு­டன் இன்று மெய்­நி­கர் வாயி­லாக சந்­திக்க இருக்­கும் வேளை­யில் 'சாவ்­பாவ்' சீன நாளி­த­ழு­க்கு அளித்த நேர்­கா­ண­லில் திரு ஹெங் இந்­தக் கருத்தை வெளி­யிட்­டார்.

இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­புக்­கான இணை குழு­வின் வரு­டாந்­திர உச்­ச­நி­லைச் சந்­திப்­பில் இரு நாட்­டின் துணைப் பிர­த­மர்­க­ளோடு இதர அமைச்­சர்­களும் பங்­கேற்க உள்­ள­னர். இந்த உச்­ச­நி­லைக் கூட்­டம் 17வது ஆண்­டாக இன்று நடக்க உள்­ளது. வளர்ச்சி குன்­றிய மேற்கு சீன வட்­டா­ரத்தை தென்­கி­ழக்­கா­சி­யா­வு­டன் பய­னுள்ள இணைப்பை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட சோங்­கிங் தொடர்­புத் திட்­டம் பற்றி திரு ஹெங் எடுத்­து­ரைத்­தார். சிங்­கப்­

பூ­ரின் பங்­க­ளிப்­புக்கு அது ஒரு நல்ல உதா­ர­ணம் என்­றார் அவர். கொரோனா கிரு­மிப் பர­வல் சூழ­லில் சீனா­வின் பொரு­ளி­யல் வளர இது உத­வி­ய­தா­க­வும் திரு ஹெங்

குறிப்­பிட்­டார். நிலம்-கடல் வர்த்­த­கத் தொடர் திட்­ட­மான இது 2015ஆம் ஆண்டு செயல்­ப­டத் தொடங்­கி­யது.

பிரகாச பிரசாரத்தில் $900,000 நிதி

'ஷைன் எ லைட்' என்னும் நன்கொடைப் பிரசாரத்தின் மூலம் இதுவரை $900,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கிய பிரசாரம் டிசம்பர் 31ல் நிறைவுறும். 'த மஜுரிட்டி டிரஸ்ட்' ஏற்று நடத்தும் இந்தப் பிரசார நடவடிக்கை யில் 60 விதமான ஒளிக்கற்றைகள் அங்குமிங்கும் அசையும். அதில் ஒரு ஒளிக்கற்றையை பார்வையாளர்கள் $20,000க்கு 'தத்து' எடுக்கலாம். இந்த நன்கொடை ஐந்து வெவ்வேறு நிதித் திட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.