மலேசிய லாரியில் 3 கிலோ கஞ்சா

மலேசிய லாரியில் 3 கிலோ கஞ்சா

2 mins read
2fc8f202-2bd9-4ffd-a069-4b1d90e3a056
துவாஸ் சோதனைச் சாவடியில் மூன்று கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா சிக்கியது. படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் -

க­ன­மான மரப்­ப­ல­கை­யும் குளி­ரூட்­டிச் சாதன உதி­ரி­ப் பா­கங்­களை ஏற்றி வந்த மலே­சி­யா­வில் பதிவு செய்­யப்­பட்ட லாரி, துவாஸ் சோத­னைச் சாவடி ஆணை­யத்­தில் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது, மூன்று கிலோ கிரா­முக்கு மேற்­பட்ட எடை­யுள்ள கஞ்சா அதில் மறைத்து வைக்­கப்­பட்டிருந்ததை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

அந்­த போதைப் பொரு­ளைக் இம்­மா­தம் 20ஆம் தேதி­யன்று கள்ளத்­த­ன­மாக சிங்­கப்­பூ­ருக்­குள் கடத்தும் முயற்­சியைக் குடி­நுழைவு, சோத­னைச் சாவடி ஆணைய (ஐசிஏ) அதி­கா­ரி­கள் முறி­ய­டித்­த­னர் என்று ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

ஐசிஏ அதி­கா­ரி­கள் ஓட்­டு­நர் இருக்­கைக்கு பின்­னால் ஒரு கறுப்பு பிளாஸ்­டிக் பையு­டன் ஒரு கயிற்­றுப் பையைக் கண்­டு­பி­டித்­த­னர்.

பிளாஸ்­டிக் பையில் மூன்று பொட்­ட­லங்­கள் இருந்­தன.

அந்­தப் பொட்­ட­லங்­கள் ஒவ்­வொன்­றும் தனித்­த­னி­யாக அலு­மி­னி­யத் தாளில் சுற்றப்பட்டு, பின்­னர் பிளாஸ்­டிக் தாளில் கட்டப் பட்டிருந்தது.

அந்த மூன்று பொட்­ட­லங்­க­ளி­லும் மொத்­தம் 3,113 கிராம் கஞ்சா மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது என்று ஆணை­யம் கூறி­யது.

லாரி­ ஓட்­டு­ந­ரான 24 வயது மலே­சி­ய ஆடவர் கைது செய்­யப்­பட்டு, மேல் விசா­ர­ணை­க்­காக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வி­டம் (சிஎன்பி) ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

கைப்­பற்­றப்­பட்ட கஞ்­சா­வின் அளவு, ஒரு வாரத்­திற்கு 440 கஞ்சா போதைப் பித்­தர்­க­ளுக்­குப் போது­மா­னது என்று ஐசிஏ தெரி­வித்து­உள்ளது.

போதைப்­பொ­ருள் கடத்­தல் முயற்­சி­க­ளைத் தடுக்க மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வு­டன் தொடர்ந்து பணி­யாற்­று­வ­தா­க­வும் சிங்­கப்­பூ­ரின் எல்­லை­களில் விரும்­பத்­த­காத நபர்­கள், ஆயு­தங்­கள், வெடி­பொ­ருள்­கள் மற்­றும் பிற கடத்­தல் பொருட்­க­ளைக் கடத்­தும் முயற்­சி­க­ளைத் தடுக்க சோத­னைச் சாவ­டி­களில் பாது­காப்­புச் சோத­னை­களை நடத்­து­வ­தா­க­வும் அது கூறி­யது.

"சிங்­கப்­பூரின் பாது­காப்­பைக் கட்­டிக்­காப்­ப­தில் நமது எல்­லை­கள்­தான் எங்­க­ளின் முதல் அரணாகும்" என்று குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் கூறி­யது.