75 வயது தந்தையைத் தாக்கிய மகனுக்குச் சிறை

75 வயது தந்தையைத் தாக்கிய மகனுக்குச் சிறை

2 mins read
2a9d7659-94e1-4565-a17f-675c38a2f45d
-

தனது 75 வயது தந்தை தனது வீட்­டின் பிரதான படுக்கையறை கழி­வறையைப் பயன்­ப­டுத்­தி­ய­தால் அந்த முதி­ய­வ­ரை அவ­ரது மகன் தாக்கி­னார்.

நவம்­பர் 10ஆம் தேதி புரிந்த இந்­தக் குற்­றத்­திற்­காக 42 வய­தான முகம்­மது அரி­ஃபின் தாஜு­தி­னுக்கு நேற்று மூன்று வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. எளிதில் பாதிப்படையக்­கூ­டிய நப­ருக்கு வேண்­டு­மென்றே காயத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக அந்­த சிங்­கப்­பூ­ரர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றத்தை நேற்று அவர் ஒப்­புக்­கொண்­டார்.

திரு தாஜு­தின் இப்­ரா­ஹிம் எனும் அந்­தத் தந்தை தன் மக­னுக்கு எதி­ராக இவ்­வாண்டு ஜன­ வ­ரி­யில் தனி­ந­பர் பாது­காப்பு ஆணை பெற்றிருந்தார். இந்த ஆணையை மதிக்­கா­மல் தன் தந்­தைக்கு எதி­ராக செயல்­பட்ட அரி­ஃபி­னின் செயல் தண்­டனை விதிப்­பின்­போது கருத்­தில் கொள்­ளப்­பட்­டது.

சம்­ப­வம் நடந்­த­போது, அரி­ஃபின் பிர­தான படுக்­கை­ய­றை­யில் தன் தந்­தை­யு­டன் இருந்­தார். அப்­போது அவ­ரது தந்தை அந்த அறை­யில் உள்ள கழி­வ­றை­யைப் பயன்­ப­டுத்தி விட்­டார் என்­ப­தால் அரி­ஃபின் ஆத்­தி­ர­ம­டைந்­தார் என்று அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் கென்னி யோங் நீதி­மன்­றத்­தில் விவ­ரித்­தார்.

"அப்­போது அரி­ஃபின், தந்­தை­யின் கன்­னத்­தில் தனது வலது கையால் பல­முறை அறைந்­தார். படுக்­கை­யில் கிடந்த குளிக்­கும் துண்டை எடுத்து அவ­ரது முகத்­தில் அடித்­தார்," என்­றும் திரு யோங் மேலும் தெரி­வித்­தார்.

இந்­தத் தாக்­கு­த­லால் திரு தாஜு­தின் மூக்­கி­லும் கண்­களிலும் வலி ஏற்­பட்­டது. ஐந்து நாள் கழித்து, தன் தந்­தை­யைப் பார்க்க வந்த அரி­ஃபி­னின் சகோ­தரி தந்­தை­யின் முகத்­தில் காயங்­கள் இருப்­ப­தைக் கண்டு அதிர்ச்­சி­யுற்­றார்.

அது பற்றி அரி­ஃபி­னி­டம் கேட்க, அவர் தந்­தை­யைத் தாக்கி­யதை ஒப்­புக்­கொண்­டார். அவ­ரது சகோ­தரி அன்றே காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­தார்.

தனது சார்­பில் வாதாட வழக்­க­றி­ஞர் எவ­ரை­யும் அமர்த்­தாத அரி­ஃபின், வீடியோ-இணைப்பு மூலம் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­னார்.

தனது குற்­றச்­சாட்டு தொடர்­பில் அவர் தண்­டனை குறைப்பு பற்றி நீதி­ப­தி­யி­டம் அவர் எந்த கோரிக்­கை­யை­யும் முன் வைக்­க­வில்லை.

அவ­ரது தண்­டனை நவம்­பர் 17ஆம் தேதி முதல் கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

தண்­டனை விதிப்­பின்­போது மாவட்ட நீதி­பதி கெஸ்­லர் சோ, அரி­ஃபின் இனி எக்­கா­ர­ணத்­தைக் கொண்­டும் தன் தந்­தை­யைத் தாக்­கக்­கூ­டாது என்று எச்­ச­ரித்­தார்.

விடு­த­லைக்­குப் பிறகு அரி­ஃபின் மன­ந­லக் கழ­கத்­தில் பரி­சோ­தனை மேற்கொள்ள வேண்­டும்.

வேண்­டு­மென்றே காயப்­ப­டுத்­திய ஒவ்­வொரு குற்­றத்­துக்­கும் மூன்று ஆண்டு வரை சிறை­யும் $5,000 அப­ரா­த­மும் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.