‘நிச்சயமற்ற சூழல் நிலவும்போதும் அஞ்சத் தேவையில்லை’

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் நிச்­ச­ய­மற்ற சூழல் நில­வுகிறபோ­தி­லும் வாழ்க்­கையை முடக்­கும் அச்­சத்­து­டன் இருக்­கத் தேவை­யில்லை என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது ஆண்­டி­று­திச் செய்­தி­யில் தெரி­வித்­துள்­ளார். நிலைமை மேம்­பட்டு வருவதை அவர் சுட்­டி­னார்.

நெருக்­க­டி­நி­லை­யால் ஏற்­பட்ட பின்­ன­டை­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரர்­களும் நாட்­டின் பொரு­ளி­ய­லும் மீண்டுவர மீள்­தி­றன் மிக­வும் அவ­சி­யம் என்­றார். அதி­பர் ஹலி­மா­வின் நான்கு நிமிட உரை ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

இவ்­வாண்டு சிங்­கப்­பூர் எதிர்­கொண்ட சவால்­களில் சில­வற்­றைத் தமது உரை­யின்­போது அதி­பர் ஹலிமா கோடிட்­டுக் காட்­டி­னார்.

"வழக்­க­நி­லைக்­குத் திரும்ப பலர் ஏங்­கு­வது எனக்கு நன்­றா­கப் புரி­கிறது. ஆனால் நிச்­ச­ய­மற்ற சூழ­லி­ருந்து நாம் இன்­னும் வெளி­வ­ர­வில்லை.

"குறிப்­பாக, ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை பற்றி போதிய தக­வல் இன்­னும் கிடைக்­க­வில்லை. அது பற்­றிய முழு விவ­ரம் நமக்கு இன்­னும் தெரி­ய­வில்லை.

"இருப்­பி­னும், எல்­லாம் முடிந்­து­விட்­ட­தா­க­வும் வாழ்­வில் இனி­மேல் வழக்­க­நிலை திரும்­பாது என்­றும் கரு­தி­வி­டக்­கூ­டாது. நிலைமை மேம்­பட்டு வரு­கிறது. நமது வாழ்வை முடக்­கும் அச்­சத்­து­டன் நாம் இருக்­கத் தேவை­யில்லை," என்று சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அதி­பர் ஹலிமா நேற்று அழைப்பு விடுத்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு

ஆத­ர­வுக்கரம் நீட்­டும் வகை­யில் நாட்­டின் கையி­ருப்பு பயன்­ப­டுத்­தப்­பட்­டது. நாட்­டின் நிதி வளம் சிறப்­பான முறை­யில் நிர்­வ­கிக்­கப்­ப­டு­வ­தாக அதி­பர் ஹலிமா தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் உள்­ளூர் வர்த்­த­கங்­க­ளுக்­கும் உதவ கடன் வாங்­கும் நிலை நமக்கு ஏற்­ப­ட­வில்லை. பல நாடு­களில் நிகழ்ந்­துள்­ளதுபோல, அடுத்த

தலை­மு­றை­யி­ன­ருக்குக் கடன் சுமையை நாம் விட்­டுச் செல்­ல­வில்லை," என்­றார் அதி­பர் ஹலிமா.

இதற்­கி­டையே நாட்­டின் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் குறித்­தும் தமது உரை­யின்­போது அதி­பர் தெரி­வித்­தார்.

நேற்­றைய நில­வ­ரப்­படி

சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில்

88 விழுக்­காட்­டினர் தடுப்­பூசி

போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக அவர் கூறி­னார். தற்­போது சிறா­ருக்­கும் தடுப்­பூசி போடப்­ப­டு­வதை அவர் சுட்­டி­னார்.

இருப்­பி­னும், எவ்­வ­ள­வு­தான் திட்­ட­மிட்­டா­லும் தயார்­நி­லை­யில் இருந்­தா­லும் கொவிட்-19 கிருமி நம் அனை­வ­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­

ப­டுத்­தக்­கூ­டி­யது என்று அதி­பர் ஹலிமா எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

"கிரு­மித்­தொற்­றின் வீரி­யம் அதி­க­ரிப்­ப­தற்­கும் குறை­வ­தற்­கு­மான கார­ணத்தை எந்த ஒரு விஞ்­ஞா­னி­யா­லும் சுகா­தா­ரத் துறை நிபு­ண­ரா­லும் நிச்­ச­ய­மாக முன்­னு­ரைக்­கவோ விளக்­கம் தரவோ முடி­ய­வில்லை.

"கொவிட்-19 கிரு­மிப் பர­வல் பெரு­ம­ள­வி­லான பாதிப்பை ஏற்­

ப­டுத்­தும் என எதிர்­பார்க்க வேண்­டும்.

"உரு­மா­றிய புதிய கிருமி வகை­களும் இதில் அடங்­கும். அத்­த­கைய சூழலை எதிர்­கொள்ள நாம் தயா­ராக இருக்க வேண்­டும்," என்று அதி­பர் ஹலிமா தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஒரு­மைப்­பாட்டை அவர் வெகு­வா­கப் பாராட்டி­னார். அத்­து­டன், வசதி குறைந்­தோ­ருக்கு உத­விய நன்­கொ­டை­யா­ளர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள், சமூக ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்கு அவர் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­பும் போக்­கு­வ­ரத்துக் கட்­ட­மைப்­பும் தொடர்ந்து சீரான முறை­யில் இயங்­கு­வதை உறுதி செய்ய பொது­நல உணர்­வு­டன், அய­ராது உழைத்த முன்­க­ளப் பணி­யா­ளர்­

க­ளுக்­கும் அதி­பர் ஹலிமா நன்றி கூறி­னார்.

"2021ஆம் ஆண்டு ஒரு முடி­வுக்கு வரு­கிறது. இந்த ஆண்­டில் நாம் செவ்­வனே செய்த பணி­களை நினைத்­துப் பார்த்து திருப்தி அடை­ய­லாம். புதிய ஆண்டு பல நல்­ல­வற்­றைத் தரும் என்ற எதிர்­பார்ப்­பு­டன் இருக்க வேண்­டும்," என்று அதி­பர் ஹலிமா தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!