தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஆகியவை இணைந்து புத்தாண்டு தினமன்று சிறப்பு இலக்கியப் பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.
'பாரதியார் தன் கதைகளின் மூலம் நமக்குப் பெரிதும் உணர்த்த விரும்பியது பெண் விடுதலையா? சாதி ஒடுக்குமுறையா?' எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடை
பெறும்.
'பெண் விடுதலையே' எனும் அணிக்குத் தலைமை ஏற்பவர் சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன்.
அவரது அணியில் திருவாட்டி கலைச்செல்வி வைத்தியநாதன், எம். சேவகன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
'சாதி ஒடுக்குமுறையே' எனும் அணி முனைவர் மன்னை
க. இராஜகோபாலன் தலைமையில் வாதிடும். அவரது அணியில் செல்வி கலைவாணி இளங்கோ, திரு. இராம்குமார் சந்தானம் ஆகியோர் வாதிடுவர்.
எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா. ஆண்டியப்பன் நடுவராகச் செயல்படுவார். வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஸூம் தளம் மூலம் தொடங்கும் பட்டிமன்றத்தில் Meeting ID : 861 7567 4163 எனும் இணைப்பில் Passcode-astw பயன்படுத்தி இணையலாம்.
அல்லது http://youtube/c/singaporetamilwriters எனும் யூடியூப் நேரலை வழி பட்டிமன்றத்தைக் காணலாம்.

