யோஷிடா பதவி விலகல் குறித்து பலர் அதிருப்தி

யோஷிடா பதவி விலகல் குறித்து பலர் அதிருப்தி

1 mins read
379a7bba-0123-42fa-a0d1-0926a37c40ce
-

சுசுகி கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யில் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு எதி­ரான அரை­யி­றுதி ஆட்­டத்­தில் சிங்­கப்­பூர் குழு கடு­மை­யா­கப் போராடி தோல்வி அடைந்­தது.

போட்­டி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் குழு வெளி­யே­றி­யதை அடுத்து, அதன் தலை­மைப் பயிற்­று­விப்

­பா­ளர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­

வ­தாக டட்­சுமா யோஷிடா அறி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள காற்­பந்து ஆட்­டக்­கா­ரர்­கள், முன்­னாள் ஆட்­டக்­கா­ரர்­கள், பயிற்­று­விப்­பா­ளர்­கள் பலர் இது­கு­றித்து அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­னர்.

"சவால்­மிக்க கால­கட்­டத்­தில் தம்­மால் முடிந்த அனைத்­தை­யும் யோஷிடா செய்­துள்­ளார்.

"இந்­நி­லை­யில், அவர் பதவி வில­கு­வது வருத்­தம் அளிக்­கிறது. சிங்­கப்­பூர் தேசிய காற்­பந்­துக் குழு­வில் அடிக்­கடி மாற்­றங்­கள் நிகழ்­கின்­றன. தலை­மைப் பயிற்­று­விப்­பா­ளர் அல்­லது தொழில்­நுட்ப இயக்­கு­நர் பத­வி­களில் அடிக்­கடி மாற்­றங்­கள் ஏற்­பட்­டால் அது குழு­வுக்கு நல்­ல­தல்ல.

"அடுத்த நிய­ம­னம் நிலைத்­

தி­ருக்க வேண்­டும். குறைந்­தது ஐந்து ஆண்­டு­க­ளுக்கு தலை­மைப் பயிற்­று­விப்­பா­ளர் பத­வி­யில் இருக்க வேண்­டும்," என்று பாலஸ்­டி­யர் கல்சா குழு­வின் பயிற்­று­விப்­பா­ளர் கிடிர் காமிஸ் தெரி­வித்­தார்.