தமது தடுப்பூசிச் சான்றை வேறு ஒருவர் பயன்படுத்த அனுமதித்த ஆடவர்

தமது தடுப்பூசிச் சான்றை வேறு ஒருவர் பயன்படுத்த அனுமதித்த ஆடவர்

1 mins read
72eea53e-da96-455f-8e77-c5b71ff4b691
-

தமது டிரேஸ்டுகெதர் கைபேசிச் செயலியை வேறொருவர் பயன் படுத்த அனுமதித்ததாக மலேசிய ஆடவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. அவரது கைபேசி யிலிருந்த அந்தச் செயலி அவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் என்று காட்டியது.

அதைப் பயன்படுத்தி உதயகுமார் நல்லதம்பி என்பவர் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி செந்தோசாவின் சிலோசோ கடற்கரை மதுபான உணவுக்கூட மான கோஸ்டெஸினுள் நுழைந் தார். தடுப்பூசி போட்டுக்கொண்ட வர்களுக்கு மட்டுமே கடைத் தொகுதிகளிலும் அரங்குகளி லும் அனுமதி உண்டு என்ற நடைமுறை நடப்பில் இருந்த நேரம் அது. இவரிடம் தமது டிரேஸ்டுகெதர் செயலியைப் பயன்படுத்தக் கொடுத்ததாக கிரண் சிங் ருக்பிர் சிங், 37, என்னும் மலேசியர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆள்மாறாட்ட மோசடிக் குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குகிறார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறும். உதயகுமார் நல்லதம்பி மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.