நிமிஸ்கி எனப்படும் நவீனபாணி கடையின் இயக்குநர் ஒருவர் கடந்த ஆண்டு கிருமித்தொற்று பரவலின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் முகக்கவசம் அணியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
நிக்கி ஹான் ஜியாயி, 34, எனப்படும் அப்பெண் மீது, கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தை மீறியதாக 21 குற்றச்சாட்டுகள் நேற்று சுமத்தப்பட்டன.
ஸ்காட்ஸ் ரோட்டிலுள்ள ஃபார் ஈஸ்ட் பிளாசா கடைத்தொகுதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 20க்கும் அக்டோபர் 21க்கும் இடைப்பட்ட பல நாள்களில் வந்தபோது அந்தப் ெபண் முகக்கவசம் அணியவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
நிமிஸ்கி என்ற பெயரில் இயங்கும் இதர மூன்று நிறுவனங்களிலும் இயக்குநர் மற்றும் பங்குதாரராக இவர் உள்ளார்.
பெண்களுக்கான நவீன ஆடை அலங்காரப் பொருள்களை விற்கும் நிமிஸ்கி நிறுவனத்திற்கு பாரகன் கடைத்தொகுதியிலும் சன்டெக் சிட்டியிலும் கிளைகள் உள்ளன.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ், முகக் கவசம் அணியாத குற்றத்தில் முதல்முறை ஈடுபடுவோருக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
மீண்டும் இந்தக் குற்றத்தை புரிவோருக்கு ஓராண்டு வரை
யிலான சிறைத் தண்டனையும் $20,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

