மூத்த குடிமக்களுக்காக தனித்துவ கைக்கணினி அமைப்பை 'லயன்ஸ் பிஃபிரண்டர்ஸ்' அற
நிறுவனம் உருவாக்கி உள்ளது. i-ok@LB என்னும் கைக்கணினி முறையில் மூத்தோர் நலனுக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நாள் காலையிலும் கைக்கணினியின் பொத்தானை மூத்தோர் அழுத்துவதன் மூலம் அவர்கள் உயிருடன் இருப்பதை உணர்ந்துகொள்ளலாம். சில குறிப்பிட்ட நேரம் வரை அவர்கள் அதனைச் செய்யத் தவறும்
போதும் அழைப்புகளுக்குப் பதில் இல்லாதபோதும் மூத்தோரின்
உறவினர் அல்லது அண்டைவீட்டாருக்கு அறநிறுவனம் தகவல் தெரிவிக்கும். மேலும், அதன் ஊழியர் ஒருவர் மூத்தோரின் நிலை அறிய நேரில் செல்வார்.

