ஹோட்டல் அறை முன்பதிவு மோசடி: ஆறு மணி நேரத்தில் ஆடவர் கைது

ஹோட்டல் அறை முன்பதிவு மோசடி: ஆறு மணி நேரத்தில் ஆடவர் கைது

2 mins read
d1b76e17-33c7-4973-93de-5bd79c538a74
-

ஹோட்­டல் அறை முன்­ப­திவு செய்­வ­தில் மோசடி செய்­த­தாக ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு உள்­ளார். இன்று (டிசம்­பர் 30) இவர் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­படும்.

இந்த மோசடி தொடர்­பாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தங்­க­ளுக்­குப் புகார் வந்­த­தாக காவல்­துறை நேற்று கூறி­யது.

ஹோட்­டல் ஒன்­றில் அறையை முன்­ப­திவு செய்ய 45 வயது ஆட­வர் ஒரு­வ­ரி­டம் பணம் தந்­த­தா­க­வும் ஆனால் உறுதிகூறியபடி அறை தரப்­ப­ட­வில்லை என்­றும் ஏமாற்­றப்­பட்­ட­வர் தமது புகா­ரில் தெரி­வித்­தி­ருந்­தார்.

உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­யில் இறங்­கிய அங் மோ கியோ காவல்­துறை பிரிவு அதி­கா­ரி­கள், புகார் கிடைத்த ஆறு மணி நேரத்­தில் சந்­தேக நபரை அடை­யா­ளம் கண்டு கைது செய்­த­னர்.

இதே­போன்ற பல மோசடிகளி லும் அந்த ஆட­வர் ஈடு­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஆட­வ­ருக்கு பத்­தாண்டு வரை­

யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

இணை­யத்­தில் மலி­வாக விலை குறிப்­பிடப்படும் பொருள்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் தவிர்க்­கு­மாறு பொது­மக்­களை காவல்­து­றை­யி­னர் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

மேலும், அதி­கா­ர­பூர்வ விற்

பனை­யா­ளர்­கள் நம்­பிக்­கைக்­கு­ரிய தரப்­பி­னர் ஆகி­யோ­ரி­டம் மட்­டுமே பொருள்­களை வாங்­கு­மா­றும் அவர்­கள் ஆலோ­சனை தெரி­வித்­துள்­ள­னர்.

இயன்­ற­வரை எந்­த­வொரு சேவைக்­கும் முன்­ப­ணம் தரு

­வ­தை­யும் நேரடி வங்­கிப் பரி­மாற்­றத்­தை­யும் தவிர்க்­கு­மா­றும் பொருள் வாங்குவோரின் பாது­காப்­புக்­கு இது துணைபுரி­யாது என்­றும் காவல்­துறை தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

நம்ப வைப்­ப­தற்­காக உள்­ளூர் வங்­கிக் கணக்கு, அடை­யாள அட்டை நகல் அல்­லது ஓட்­டு­நர் உரிம நகல் போன்­ற­வற்றை மோச­டிக்­கா­ரர்­கள் 'வாட்ஸ்­அப்' அல்­லது 'வீசாட்' செயலி மூலம் அனுப்­பு­வார்­கள் என்­றும் அதனை பொது­மக்­கள் நம்­பி­விட வேண்­டாம் என்­றும் மோச­டி­யில் சிக்­கா­மல் விழிப்­பு­டன் இருக்­கு­மா­றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.