புதிய அம்சங்களில் ஒத்துழைக்க சிங்கப்பூர், சீனா உறுதி
புதிய அம்சங்களில் ஒத்துழைக்க சிங்கப்பூரும் சீனாவும் உறுதிபூண்டுள்ளன. குறிப்பாக, மின்னிலக்கப் பொருளியல், பசுமைச் சூழல் மேம்பாடு ஆகியன உள்ளிட்ட 14 உடன்பாடு களுக்கு இரு நாடுகளும் இணைங்கி உள்ளன. உயர்மட்ட இருதரப்புக் கருத்தரங்கு நேற்று மெய்நிகர் வாயிலாக நடை பெற்றது. இந்த 17வது இருதரப்பு ஒத்துழைப்பு இணைக் குழு உச்சநிலைக் கூட்டத்துக்கு சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் சீனாவின் துணைப் பிரதமர் ஹான் ெஸங்கும் தலைமை ஏற்றனர்.
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு 10 ஆக இருந்த எண்ணிக்கை இவ்வாண்டு 14ஆக அதிகரித்துள்ளது. கொள்ளைநோய் பரவல் சூழலிலும் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையி லான ஒத்துழைப்பு நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதை
இரு தலைவர்களும் வரவேற்றனர். குறிப்பாக, நிதி ஒத்துழைப்புக்கான முதலீடு மற்றும் வர்த்தகம் தொடங்கி பல்வேறு மரபுரீதியான அம்சங்களில் ஒத்துழைப்பு மேம்பட்டு உள்ளதை அவர்கள் சுட்டினர். மின்னிலக்க யுகத்தின் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்தும் விதமாக இவ்வாண்டு புத்தாக்க ஒத்துழைப்பு என்னும் புதிய அம்சம் பற்றியும் இச்சந்திப்பில் பேசப்பட்டது. கொள்ளைநோய்க்குப் பிந்திய பொருளியல் மீட்சிக்குத் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்து திரு ஹெங் விளக்கினார். மேலும், வர்த்தகங்கள், மாணவர்கள் போன்றோரை உள்ளடக்கிய மக்களோடு மக்கள் என்னும் தொடர்புமுறையை மீட்பதும் அவசியம் என்றார் அவர்.
இணையம்வழி ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக ஆடவர் கைது
'ஒன்லிஃபேன்ஸ்' என்னும் இணையத்தளத்தில் தனது அந்தரங்க உறுப்புகளின் படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டதாக 22 வயது ஆடவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது இன்று (டிசம்பர் 30) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். இந்த இணையத்தளத்தில் ஆபாசப் படங்கள் அனுப்பியதாக அந்த ஆடவரைப் பற்றி கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி தனக்குப் புகார் வந்ததாக காவல்துறை நேற்று கூறியது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 11ல் அவரது 'ஒன்லிஃபேன்ஸ்' கணக்கு முடக்கப்பட்டு அவர் எச்சரிக்கப்பட்டார். ஆயினும் அந்த இணையத்தள நிர்வாகி
களிடம் மாற்று மறைச்சொல் பெற்று மறுபடியும் அந்த இணையத்தளத்தைப் பயன்படுத்தி அதே ஆபாசச் செயல்
களைச் செய்தார். அதனை அறிந்த காவல்துறை அவரது இரு கணக்குகளையும் பயன்படுத்தக்கூடாது என்று நவம்பர் 1ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. ஆணையை மீறியதாக ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது. இதற்கான தண்டனை ஆறு மாதம் வரையிலான சிறை, $5,000 வரையிலான அபராதம். ஆபாசப் படங்களை அனுப்பிய இரு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்படும். இந்தக் குற்றம் ஒவ்வொன்றுக்கும் மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனை,
அபராதம் விதிக்கப்படலாம். ஆபாசப் படங்களை மின்னியல் வடிவில் அனுப்புவதும் வர்த்தக நலனுக்காக அவற்றைப் பயன்படுத்துவதும் விற்பனை விளம்பரத்திற்கு அவற்றைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆயுதம், வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் ஆடவர் மீது குற்றச்சாட்டு
பல்வேறு ஆயுத வடிவிலான பொம்மைகளை இறக்குமதி செய்ததாகவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் விளையாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் ஆடவர் ஒருவர் மீது
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூ கீ ஆன், 48, எனப்படும் அவர் காயத்தை ஏற்படுத்தக்கூடிய கண்மூடித்தனமான செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இறக்குமதி, ஏற்றுமதிச் சட்டம் மற்றும் ஆயுதம், வெடிமருந்து சட்டம் ஆகியவற்றின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார். 2020 ஏப்ரல் 7ஆம் தேதி விளையாட்டுத் துப்பாக்கியால் லீ கார் ஷிங் என்பவர் மீது சுட்டார். அதிலிருந்து வெளிப்பட்ட சிறுதோட்டா லீயின் வலது கையில் பட்டது. என்ன காரணத்துக்காக இச்செயல் நடைபெற்றது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.

