தடுப்பூசி: ஓராண்டில் சிங்கப்பூர் மகத்தான சாதனை

தடுப்பூசி: ஓராண்டில் சிங்கப்பூர் மகத்தான சாதனை

1 mins read
a295e32b-ae70-4fc1-988b-931f4bd2ee74
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் முதல் கொவிட்-19 தடுப்பூசி கடந்த ஆண்டு இதே டிசம்பர் 30ஆம் தேதி போடப்பட்டது. அது முதல் ஓராண்டு காலம் ஓடிவிட்டது. இந்த நிலையில், இப்போது நாட்டின் மக்கள் தொகையில் 87% முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். 39% 'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாண்டு டிசம்பர் 28ஆம் தேதி நிலவரப்படி, மக்கள்தொகையில் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆக அதிக விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ள நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாக இருக்கிறது என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் 'நம் உலகப் புள்ளிவிவரம்' என்ற செயல்திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

நாட்டின் தடுப்பூசிப் பயணம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே தொடங்கப்பட்டுவிட்டது.

உலகம் முழுவதும் எந்தெந்த தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி மருந்தை வாங்கலாம் என்பதை ஆராய்வதற்காக வல்லுநர் குழுவை சிங்கப்பூர் அமைத்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், மொடர்னா நிறுவனத்துடன் சிங்கப்பூர் அதன் முதலாவது கொள்முதல் உடன்பாட்டை செய்துகொண்டது. இருந்தாலும், கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மருந்தே முதலில் சிங்கப்பூருக்கு வந்தது.