நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 18ல் 2022 வரவுசெலவுத் திட்டம்; நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார்

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 18ல் 2022 வரவுசெலவுத் திட்டம்; நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார்

2 mins read
f854abb7-ab8c-40dd-a769-64fdce926136
-

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நாடா­ளு­மன்­றத்­தில் வரும் பிப்­ர­வரி 18ஆம் தேதி வர­வு­செ­ல­வுத் திட்­டம் 2022ஐ தாக்­கல் செய்து உரை­யாற்று­வார்.

வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாக்கல் செய்து அமைச்­சர் ஆற்றும் உரை தொலைக்­காட்­சி­யி­லும் வானொ­லி­யி­லும் நேர­டி­யாக ஒளி, ஒலி­ப­ரப்­பா­கும் என்று நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் வர­வு­செ­ல­வுத் திட்ட இணை­யப் பக்­கத்­தி­லும் நிதி அமைச்சரின் உரையை நேர­டி­யாகக் காண­லாம்.

அமைச்­சர் உரை­யாற்றி முடித்த பிறகு வர­வு­செ­ல­வுத் திட்ட உரை முழு­மை­யாக அந்த இணை­யத் தளத்­தில் பதி­வேற்­றப்­படும் என்று அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

நிதி அமைச்­சின் ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் டுவிட்­ட­ரி­லும் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின் முக்­கிய அம்­சங்­கள் உட­னுக்­கு­டன் பதி­வேற்­றப்­படும் என்­றும் அவற்றைப் பொது­மக்­கள், அமைச்­சர் உரை­யாற்­றும் அதே நேரத்­தில் தெரிந்­து­கொள்­ள­லாம் என்­றும் நிதி அமைச்சு மேலும் குறிப்­பிட்டு உள்­ளது.

இவ்­வே­ளை­யில், 2022 வர­வு­செ­ல­வுத் திட்­டத்­திற்­கான யோசனை­கள், கருத்­து­கள், கண்­ணோட்­டங்­கள் பொது­மக்­க­ளி­டம் இருந்து தொடர்ந்து வர­வேற்­கப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்சு தெரி­வித்­தது.

இணை­யம் வழி அல்­லது ரீச் வர­வு­செ­ல­வுத் திட்ட கருத்­த­றி­யும் ஏற்­பாட்­டின் மூலம் பல்­வேறு யோச­னை­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் தெரி­வித்து வரும் சிங்­கப்­பூ­ரர்­களுக்கு அமைச்சு நன்றி கூறி­யது.

மக்­கள் 2022 ஜன­வரி 17ஆம் தேதி திங்­கட்­கி­ழமை வரை ரீச் இணை­யத்­த­ளம் மூல­மாக தொடர்ந்து கருத்­து­கள், யோச­னை­களைத் தாக்­கல் செய்­ய­லாம் என்று அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

பொது­மக்­க­ளின் யோசனைகளை ­யும் கருத்­து­க­ளை­யும் நாடு­வதற்காக மக்­கள் கழ­கம் மற்றும் அத­ன் அடித்­தள அமைப்­பு­க­ளு­டன் பங்­கா­ளித்­துவ உறவை அமைச்சு ஏற்­ப­டுத்­திக் கொண்டு உள்­ளது.

மக்­கள் Ask Kopi Kakis #shareyourviews என்ற மெய்­நி­கர் தளத்­தின் வழி இதில் தங்­களை ஈடு­படுத்­திக்கொள்­ள­லாம்.

வர­வு­செ­ல­வுத் திட்ட இணை­யத்­த­ளம், ரீச் வர­வு­செ­ல­வுத்­திட்ட இணை­யத்­த­ளம், ரீச் ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம், #shareyourviews என்ற இணை­யத்­த­ளம் ஆகி­ய­வற்­றின் மூலம் மக்­கள் கருத்­து­கள், யோச­னை­க­ளைத் தாக்­கல் செய்ய முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.