'5 பொருட்களை வாங்காதீர்'

'5 பொருட்களை வாங்காதீர்'

1 mins read
0753ec2d-2063-45f3-b476-9e398505564e
-

உள்­ளூ­ரில் இணைய வர்த்­த­கத் தளங்­கள் வழி­யா­க­வும் சமூக ஊட­கம் வழி­யா­க­வும் விற்­கப்­படும் ஐந்து பொருட்களில் தடை செய்­யப்­பட்ட ஒரு பொருள் உட்­பட உட­லுக்கு ஒத்­து­வ­ராத கலப்­ப­டப் பொருட்­கள் இருப்­பது தெரி­ய­வந்து இருக்­கிறது.

அந்­தப் பொருட்­க­ளைப் பயன்­படுத்­தி­னால் கடு­மை­யான பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­படும் என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் எச்­ச­ரித்து இருக்­கிறது.

எக்ஸ்-கவுட், டிசி­ஆர் நேச்­சுரல் ஹெர்ப்ஸ் ஹனி என்­சைம், கேஎம்­எஸ்2 டார்க் சாக்­லேட் மோச்சா பொட்­டா­னிக்­கல் பீவ­ரேஜ், ஸ்பீடி சிலிம் கேப்­சூல்ஸ் (பிளாக்), ஸ்பீடி சிலிம் கேப்­சூல்ஸ் (கோல்டு) ஆகிய ஐந்து பொருட்­க­ளை­யும் யாரும் வாங்க வேண்­டாம் என்றும் யாரா­வது இந்­தப் பொருட்­க­ளைப் பயன்­ப­டுத்தி இருந்­தால் உட­னடி யாக மருத்­து­வ­ரைச் சென்று பார்க்­கும்­ப­டி­யும் ஆணை­யம் ஆலோசனை கூறி உள்­ளது.