'பதின்ம வயது பையன் மரணம்; ஊகச் செய்திகளைப் பரப்பாதீர்'

'பதின்ம வயது பையன் மரணம்; ஊகச் செய்திகளைப் பரப்பாதீர்'

2 mins read
5de65293-36fc-490b-bb5a-a0eb391ef3e6
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசியைப் போட்­டுக்­கொண்­ட­தற்­குப் பிறகு 75 நாள்­கள் கழித்து பதின்ம வய­துப் பையன் ஒரு­வர் மர­ண­மடைந்­து­விட்­டார்.

அந்­தப் பைய­னின் மர­ணத்­திற்கு என்ன கார­ணம் என்­ப­தைக் கண்டு­பி­டிப்­ப­தற்­காக பிரே­தப் பரி­சோதனை நடத்­தப்­பட்டு இருக்­கிறது என்று சுகா­தார அமைச்சு ஃபேஸ்புக்­கில் தெரி­வித்து உள்­ளது.

இணை­யத்­தில் புழங்­கி­வ­ரும் திருத்­தப்­பட்ட காவல்­துறை புகார் பற்றி தனக்­குத் தெரி­யும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்டு இருக்­கிறது.

அந்­தப் பதின்ம வய­துப் பையன் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி கார­ண­மாக மர­ண­ம­டைந்து இருக்­கி­றார் என்று புகார் கூறப்­ப­டு­கிறது.

அத்­த­கைய ஒரு செய்­தியை டாக்­டர் பால் யாங் பதி­வேற்றி இருக்­கி­றார். இவர், தடுப்­பூ­சிக்கு எதி­ராக பிர­சா­ரம் செய்து வந்­தி­ருக்­கி­றார்.

இப்­படி புகார் கூறு­வது கடு­மை­யான ஒன்று என்று அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

அந்­தப் பதின்ம வய­துப் பையனின் மர­ணம், மரண விசாரணைக்கு அனுப்­பப்­பட்­டது. பிரே­தப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. மேலும் பல பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. மர­ணத்­திற்­கான கார­ணம் இனி­மேல்­தான் தெரி­ய­வ­ரும்.

இத்­த­கைய ஒரு நிலை­யில், அந்­தப் பைய­னின் மர­ணம் தொடர்­பில் ஆதா­ர­மில்­லாத, நிரூ­பிக்­கப்­ப­டாத ஊகச் செய்­தி­க­ளைப் பொது­மக்­கள் பரப்­பக் கூடாது என்று அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளுக்கு ஏற்ற, கடு­மை­யான பாது­காப்பு, தரம், ஆற்­றல்­மிக்க தடுப்­பூசி மருந்து மட்­டுமே சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­பதை அமைச்சு தனது செய்தி யில் சுட்­டி­யது.

கொவிட்-19க்கு எதி­ரான முக்­கிய அர­ணா­கத் திகழும் தடுப்­பூ­சிக்குத் தொடர்ந்து ஆத­ரவு அளிக்­கும்­படி பொது­மக்­களை அது கேட்­டுக்­கொண்­டது.