புருணை பயணப் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் நீக்கம்

புருணை பயணப் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் நீக்கம்

2 mins read
3c2b220e-3c39-4249-b32c-36d41f2fa024
-

புருணை அர­சாங்­கம், நாட்­டின் உள்ளே வரு­வ­தற்­கும் வெளியே செல்­வ­தற்­கு­மான புதிய வழி­காட்டி நெறி­மு­றை­களை அறி­வித்துள்­ளது.

சிங்­கப்­பூர் உள்­ளிட்ட அனைத்து நாடு­க­ளை­யும் தற்­கா­லி­க­மாக பயண ஏற்­பாட்டு பட்­டி­ய­லில் இருந்து புருணை அகற்­றி­விட்­டது.

"இப்­போ­தைய கொவிட்-19 சூழ்­நி­லையை, குறிப்­பாக பல நாடு­களில் தொற்று கூடு­வ­தை­யும் ஓமிக்­ரான் மிரட்­டல் தலை­யெ­டுப்­ப­தை­யும் கருத்­தில்­கொண்டு கொவிட்-19க்கான வழி­காட்டி குழு, பய­ணப் பட்­டி­ய­லில் இருந்து எல்லா நாடு­க­ளை­யும் அகற்ற தற்­கா­லி­க­மாக முடிவு எடுத்து இருக்­கிறது," என்று புருணை­யின் பிர­த­மர் அலு­வ­ல­கம் அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

இதை­ய­டுத்து 2022 ஜன­வரி 1ஆம் தேதி முதல் பயண அனு­மதி பட்­டி­ய­லில் எந்­த­வொரு நாடும் இடம்­பெற்று இருக்­காது என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சியை போட்­டுக்­கொண்டு உள்ள புருணை குடி­மக்­களும் புரு­ணை­வா­சி­களும் வெளி­நாட்­டி­ன­ரும் 2022 ஜன­வரி 1 முதல் பய­ணப் பட்­டி­யலில் இடம்­பெற்று உள்ள நாடு­க­ளுக்கு விமா­னம் மூலம் பய­ணம் செய்யலாம் என்று இந்த மாதத் தொடக்­கத்­தில் புருணை அறி­வித்து இருந்­தது.

ஆஸ்­தி­ரே­லியா, சீனா, சிங்­கப்­பூர், பிரிட்­டன் உள்­ளிட்ட நாடு­கள் அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்று இருந்­தன.

ஆனால் ஓமிக்­ரான் தொற்று அதி­க­மா­னதை அடுத்து அந்­தப் பட்­டி­ய­லில் இருந்து ஒரு வாரம் முன்பே பிரிட்­டன் அகற்­றப்­பட்­டு­விட்­டது.

புதிய விதி­மு­றை­களை அடுத்து அவ­சிய நோக்­கத்­திற்­காக புருணை செல்ல விரும்­பும் வெளி­நாட்­டி­னர், முத­லில் அனுமதி பெற­வேண்டும்.

தங்­கள் நாடு­களில் இருந்து புறப்­ப­டு­வ­தற்கு 48 மணி நேரம் முன்­ன­தாக அவர்­கள் ஆர்டி-பிசிஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட்டு இருக்­க­வேண்­டும்.

புருணை வந்­த­தும் அவர்­கள் ஏஆர்டி பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். குறிப்­பிட்ட ஹோட்­டல்­களில் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ளவேண்­டும்.

புரு­ணை­யில் தரை­யி­றங்­கிய பிறகு ஐந்­தா­வது நாளன்று ஆர்டி-பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு அவர்­கள் உட்­பட வேண்­டும்.

புரு­ணை­யில் இருந்து வெளியே செல்ல விரும்­பும் குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் புறப்­ப­டு­வ­தற்கு 14 நாட்­களில் இருந்து மூன்று மாத காலத்­திற்­குள் கொவிட்-19க்கு எதி­ரான இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்டு இருக்­க­வேண்டும். பயண அனு­ம­தி­யை­யும் பெற்­றி­ருக்க வேண்­டும்.

புருணை மக்­கள்தொகை­யில் 94.5% கடந்த டிசம்­பர் 28ஆம் தேதி நில­வ­ரப்­படி குறைந்­த­பட்­சம் ஒரு தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொண்டு இருந்­த­னர். 93.2% இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்டு இருந்­த­னர். மூன்று தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் 17.9% என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

புரு­ணை­யில் புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி புதி­தாக நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அங்கு மொத்­தம் 15,465 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி இருக்­கி­றார்­கள்.