சிங்கப்பூருக்கு முதன்முறையாக வருகை தந்த விருந்தினர்

சிங்கப்பூருக்கு முதன்முறையாக வருகை தந்த விருந்தினர்

1 mins read
587a77f9-b894-449e-8f89-d837987096e3
-

'சினரஸ் வல்ட்சர்' எனப்படும் அரிய வகை கழுகு (படத்தில் வலது) முதன்முறையாக சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளது. ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களில் காணப்படும் ஆகப் பெரிய கழுகு இது. கடந்த ஓராண்டில் இங்கு அதிகம் காணப்படாத இடம் விட்டு இடம் மாறும் சில வகை பறவைகள் சிங்கப்பூருக்கு வந்திருக்கின்றன. அவற்றில் இந்தக் கழுகும் அடங்கும். இதனுடன் ஐந்து 'இமாலயன் கிரைஃபன்' வகை கழுகுகளும் ஒன்றுகூடின.

நேற்று காலை சிங்கப்பூர் பூமலையில் பறந்துகொண்டிருந்த இவற்றைப் படமெடுக்க பல பறவை நிழற்பட ஆர்வலர்கள் திரண்டனர். கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் காவல்துறையினரும் அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்