கூடுதலானோர் தட்டுகளைத் தாமே அகற்றுகின்றனர்

கூடுதலானோர் தட்டுகளைத் தாமே அகற்றுகின்றனர்

2 mins read
26629e66-1692-4b7d-b476-b61280c7f2da
காப்பிக் கடை பணியாளருடன் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உண­வங்­கா­டி­ நிலையங்களில் ஐந்­தில் நான்குக்­கும் அதி­க­மான வாடிக்­கை­யா­ளர்­கள் உண­வ­ருந்தப் பயன்­படுத்­திய தட்­டு­க­ளை­யும் கரண்­டி­களை­யும் தாங்களே அகற்றுவதாகத் தெரி­ய­வந்­துள்­ளது. உண­வங்­காடி நிலையங்களில் மேசை­க­ளின் மேல் குப்­பை போடு­வ­தைத் தடுக்க கடந்த செப்­டம்­பர் மாதம் சில விதிமு­றை­கள் நடப்­புக்கு வந்­தன. அதற்கு முன்பு இருந்­த­தைக் காட்­டி­லும் அதி­க­மானோர் தட்­டு­க­ளை­யும் கரண்­டி­களை­யும் தாமா­கவே அகற்­று­கின்றனர்.

"மேசை­க­ளைத் தாங்­களே சுத்­த­மாக வைக்­க­வேண்­டும் என்ற பொறுப்­பு­ணர்வு பொது­வாக உண­வ­ருந்த வரு­வோ­ரி­டையே கூடு­த­லா­கக் காணப்­ப­டு­கிறது, அவ்­வாறு செய்ய அவர்­கள் விரும்­பு­கின்­ற­னர்," என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஏமி கோர் கூறி­னார். கங்சா சாலை­யில் உள்ள சோ டீ பிளேஸ் காப்­பிக் கடை, 'ஹில்­லி­யன் மால்' கடைத்­தொ­கு­தி­யில் உள்ள 'கோப்­பித்­தி­யாம்' உண­வங்­காடி நிலையம் ஆகி­ய­வற்­றுக்­குச் சென்­ற­போது டாக்­டர் கோர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார். மேசை­களை சுத்­த­மாக வைப்­ப­தற்­கான விதி­மு­றை­கள் நாளை முதல் காப்­பிக் கடை­கள், உணவு நிலையங்கள் ஆகி­ய­வற்­றிலும் நடை­மு­றைப்­படுத்தப்­படும்.

புதிய விதி­மு­றை­க­ளின்­படி உண­வங்­காடி நிலை­யங்­களில் இரண்டா­வது முறை­யாக தட்­டு­க­ளை­யும் கரண்­டி­க­ளை­யும் அகற்­றா­தோ­ருக்கு 300 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­படும். அதற்­குப் பிற­கும் அதே தவற்றை இழைப்­போ­ருக்கு 2,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­படும். இந்த விதி­மு­றை­கள் நடப்­புக்கு வரு­வ­தற்கு முன், மூன்­றில் ஒரு­வர் மட்­டுமே உண­வங்­காடி நிலை­யங்­களில் தாங்­கள் பயன்­ப­டுத்­திய தட்­டு­க­ளை­யும் கரண்­டி­க­ளை­யும் அகற்­றி­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

தேசிய சுற்­றுப்­புற வாரியத்தின்­கீழ் 114 உண­வங்­கா­டி­ நிலையங்கள் இயங்குகின்றன. அவற்­றில் இது­வரை ஒரு­வ­ருக்கு மட்­டுமே விதி­மு­றை­களை மீறி­ய­தற்­காக எழுத்து வடி­வில் எச்­ச­ரிக்கை வழங்­கப்­பட்டிருக்­கிறது.

சுமார் 400 காப்­பிக் கடை­களும் உணவு நிலை­யங்­களும் தட்­டு­கள் கரண்­டி­கள் ஆகி­ய­வற்­றை உரிய இடத்தில் வைப்பதற்கான கூடு­தல் வச­தி­களை ஏற்­ப­டுத்­தி­கொள்ள வகை­செய்­யும் தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் உத­வித் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­தி­ய­தாக டாக்­டர் கோர் தெரி­வித்­தார். அதன்­படி சம்­பந்­தப்­பட்ட வச­தி­க­ளைச் செய்து தரு­வதற்­கான செல­வில் பாதிக்கு நிதி­யு­தவி வழங்­கப்­படும். ஒவ்­வொரு காப்­பிக்­கடை அல்­லது உணவு நிலை­யத்­திற்­கும் அதி­க­பட்­ச­மாக 2,500 வெள்ளி நிதி­யு­தவி வழங்­கப்­படும்.