இலவச சட்ட சேவை நிலையங்கள்

1 mins read
0fe59f82-eec4-4a77-81c8-a413bac2b47e
-

இல­வ­ச­மாக சட்ட சேவை­களை வழங்­கும் சிங்­கப்­பூர் சிந்தி சங்­கத்­தின் புதிய நிலை­யம் திறக்­கப்­பட்டுள்­ளது. இச்­சங்­கத்­தின் நூறாவது ஆண்டு நிறை­வைக் கொண்­டாட சமூகத்திற்கு சேவை­யாற்­றும் நோக்­கு­டன் இந்­நி­லை­யம் அமைக்கப்பட்டுள்ளது.

சட்ட சேவை­க­ளுக்­கான கட்டணங்­க­ளைச் செலுத்த வசதி இல்­லாத மக்களுக்கு புதிய நிலை­யம் உத­வும். குறிப்­பாக சிந்தி சமூகத்­தி­னர், சிந்தி சங்­கம் அமைந்­துள்ள காத்­தோங், மவுண்ட்­பேட்­டன் வட்­டார வாசி­கள் ஆகி­யோ­ருக்கு உதவி வழங்­கப்­படும். நிலை­யத்­தில் பணி­யாற்­றும் தொண்டூழி­யர்­க­ளான வழக்­க­றி­ஞர்­களும் ஆலோ­ச­கர்­களும் சிந்தி சங்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

'எல்­எஸ்­பி­பி­எஸ்' எனப்­படும் சிங்­கப்­பூர் சட்ட அமைப்­பின்­கீழ் இல­வச சட்ட சேவை­களை வழங்­கும் நிலை­யம், சிந்தி சங்­கம் இரண்­டும் இணக்­கக் குறிப்­பி­லும் கையெ­ழுத்­திட்­டன. இந்த ஏற்­பாட்­டின்­கீழ் தன்­னி­டம் சேவை­களை நாடு­வோரை 'எல்­எஸ்­பி­பி­எஸ்' அமைப்பு, சிந்தி சங்­கத்­தின் இல­வச சட்ட சேவை நிலை­யத்­திற்கு அனுப்­ப­லாம்.

சட்ட சேவை­கள் மக்­களை சென்­ற­டை­வது மேம்­ப­டு­வ­தால் இந்­தப் பங்­கா­ளித்­து­வம் தமக்கு மிகுந்த மன­நி­றை­வைத் தரு­வ­தாக இணக்­கக் குறிப்பு கையெ­ழுத்­தா­னதை நேரில் கண்ட பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா கூறி­னார். "தொண்­டூ­ழி­யம், பிற­ருக்­குக் கொடுப்­பது, பங்­கா­ளித்­து­வம் ஆகி­யவை சார்ந்த உணர்வே இல­வச சேவை­யின் மகத்­து­வத்தை வெளிப்­படுத்­தும், ஆக்­க­பூர்­வ­மான வகை­யில் பல­ரின் வாழ்க்­கை­யைத் தொடும்," என்று குமாரி ராஜா குறிப்­பிட்­டார். சட்­டம் சார்ந்த தக­வல்­கள், சேவை­கள் ஆகி­ய­வற்றை ஒருங்­கி­ணைக்­கும் தளம் ஒன்றை உரு­வாக்க, சட்ட அமைச்­சும் 'எல்­எஸ்­பி­பி­எஸ்' அமைப்­பும் இணைந்து செயல்­ப­டு­வதா­க­வும் அவர் சொன்­னார்.