'சீனப் பொருளியலால் சிங்கப்பூர் பலனடையலாம்'

'சீனப் பொருளியலால் சிங்கப்பூர் பலனடையலாம்'

1 mins read
3370e7b8-66ab-44cd-a85e-509a6c42a796
-

சீனா­வின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­ய­டை­யும்­போது, அது சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்­குப் பல வாய்ப்­பு­களை அளிக்­க­லாம் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யுள்­ளார். தனது பொரு­ளி­யலை வளர்க்க சீனா புதிய முறைக்கு மாறு­கிறது. அதில் பங்­காற்ற சிங்­கப்­பூர் எண்­ணம் கொண்­டுள்­ள­தென திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

"வட்­டார, அனைத்­து­லக அள­வில் சீன நிறு­வ­னங்­கள் வளரும் வாய்ப்புகளுக்கு சிங்­கப்­பூர் மிகச் சிறந்த தள­மாக அமை­ய­லாம்," என்று திரு ஹெங் சொன்­னார். சீனா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வின் தொடர்­பில் ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­படும் சந்­திப்­பில் செய்­தி­யா­ளர்­களி­டம் அவர் அவ்­வாறு கூறி­னார்.