அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் பொட்டலமிடப்பட்ட இனிப்புப் பானங்களின் ஊட்டச்சத்து அளவை வாடிக்கையாளர்கள் எளிதில் அறிந்துகொள்ளமுடியும். உள்ளிருக்கும் பானத்தின் ஊட்டச்சத்து அளவின்படி ஒவ்வொரு பொட்டலத்திலும் 'ஏ'க்கும் 'டி'க்கும் இடையே நான்கில் ஒரு குறிப்பு இடம்பெறும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
'டி' குறிப்பைப் பெறும் பானங்கள்தான் உடலுக்கு அறவே நல்லதன்று. குறைவான அளவில் சர்க்கரையை உட்கொள்ளுமாறு சிங்கப்பூரர்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

