கடல்துறைக்குத் தொடர் ஆதரவு

கடல்துறைக்குத் தொடர் ஆதரவு

1 mins read
25dfad6b-40e2-4f96-8d84-3065660a316f
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லைக் கையாள்வதற்கான உத­வித் திட்­டங்­கள் கடல்­துறை நிறு­வ­னங்­களுக்­குத் தொடர்ந்து வழங்­கப்­படும். இம்­மா­தம்­வரை மட்­டும் நடப்­பில் இருந்த உத­வித் திட்­டங்­கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம்­வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

வட்­டார அள­வில் பட­கு­க­ளை­யும் கப்­பல்­க­ளை­யும் இயக்­கும் துறை­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு நீட்­டிக்­கப்­பட்­டி­ருக்­கும் 'மேரிட்­டைம்­எஸ்ஜி டுகெ­தர் பேக்­கேஜ்' எனப்­படும் ஒன்­றி­ணைந்த கடல்­துறை-எஸ்ஜி தொகுப்­புத்­திட்­டம் கைகொ­டுக்­கும். தொடர்ந்து நடப்­பில் இருந்­து­வ­ரும் பய­ணத் தடை­க­ளா­லும் எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளா­லும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வு­வது இத்­திட்­டத்­தின் இலக்கு.

வட்­டார அள­வில் பட­கு­க­ளை­யும் கப்­பல்­க­ளை­யும் இயக்­கும் நிறு­வ­னங்­கள், 'சிங்­கப்­பூர் குரூஸ் சென்­டர்' எனும் சிங்­கப்­பூர் சொகு­சுக் கப்­பல், பட­கு­கள் முனை­யம் ஆகி­ய­வற்­றுக்­கான மூன்று மில்­லி­யன் வெள்ளி மானி­யம் ஆறு மாதங்­களுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது. இந்த உத­வித் திட்­டம் இன்று முடி­வுக்கு வர­வி­ருந்­தது.

இத்­திட்­டம் கடந்த ஜூன் மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் மூலம் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­களுக்­குக் கடல் பய­ணங்­க­ளுக்­கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைச் செயல்­ப­டுத்த நிதி­யு­தவி வழங்­கப்­படும். எடுத்­துக்­காட்­டாக, தானா மேரா படகு முனை­யத்­தில் சுத்­தி­கரிப்­புப் பணி­களை மேற்­கொள்­ளும் இயந்­திர மனி­தர்­களை இயக்க சிங்­கப்­பூர் சொகு­சுக் கப்­பல், பட­கு­கள் முனை­யத்­திற்­கு நிதியுதவி கைகொடுத்­தது. தொடர்­பு­க­ளின் தட­ம­றிய, மின் இருக்கை முறை­யைச் செயல்­படுத்த வட்­டார அள­வில் பட­கு­களை இயக்­கும் 'பாத்­தாம் ஃபாஸ்ட்' நிறு­வ­ன­மும் நிதி­யு­த­வி­யைப் பயன்­படுத்­தி­யது.

சம்­பா­திக்­கக் கடல் பய­ணங்­களை நம்­பி­யி­ருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­களுக்­கும் தொடர்ந்து ஆத­ரவு வழங்­கப்­ப­டு­கிறது. எல்­லைக் கட்டுப்­பா­டு­கள் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் கப்­பல்­களில் வேலை கிடைக்க சிர­மப்­ப­டு­வோ­ருக்கு இதன் மூலம் உதவுவது நோக்கம்.