சிங்கப்பூரில் பருவ மழையுடன் புத்தாண்டு வரவேற்கப்படும்

சிங்கப்பூரில் பருவ மழையுடன் புத்தாண்டு வரவேற்கப்படும்

2 mins read
3192dbc0-5775-443b-a8fb-e1df9ea83060
சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளுக்கு மேல் தோன்றிய கார்மேகங்கள். 2022ஆம் ஆண்டு பிறக்கும்போது சிங்கப்பூரில் தொடர்ந்து மழை பொழிந்த வண்ணம் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.கோப்புப் படம் / ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புத்­தாண்டு பிறக்­கும்­போது சிங்கப்­பூ­ரில் தொடர்ந்து மழை பொழிந்­து­கொண்­டி­ருக்­கும் சாத்­தி­யம் அதி­கம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முதல் ஜன­வரி மாதம் தொடங்கிய பிறகு சில நாள்­கள் வரை மழை தொடர்ந்து பெய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அடுத்த வாரம் திங்­கட்­கிழமை வரை பரு­வ­மழை தொட­ரும் என்று மலே­சிய வானிலை பிரிவு கணித்­துள்­ளது. பல வானிலை முறை­க­ளைக் கொண்டு நடத்­தப்­பட்ட ஆய்­வு­களின்­வழி அப்­பி­ரிவு இதனை கணித்­தது. இந்த வட்­டா­ரத்­தில் பரு­வக் காற்று திடீ­ரென பல­மாக வீசும்­போது சிங்­கப்­பூ­ரில் இடி­யு­டன் கூடிய மழை பொழி­யும். இந்த வேளையில் குளிர்க் காற்றும் வீசும்.

சிங்­கப்­பூ­ரில் ஆண்­டு­தோ­றும் சரா­ச­ரி­யாக இரண்­டி­லி­ருந்து நான்கு முறை பரு­வக் காற்று பல­மாக வீசும். பெரும்­பா­லான வேளை­களில் இந்­நி­கழ்வு டிசம்­பர் மாதத்­திற்­கும் மார்ச் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இடம்­பெ­றும் என்று தேசிய சுற்­றுப்­புற அமைப்­பின் சிங்­கப்­பூர் வானிலை ஆய்வு மையம் அதன் இணை­யத்­தளத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தது. இந்­தக் கால­கட்­டத்­தில் வடக்­கி­லி­ருந்து சிங்கப்பூரின் பக்­கம் பலத்த காற்று வீசும்.

இதே கால­கட்­டத்­தில்­தான் உல­கின் வடக்­குப் பகு­தி­யில் உள்ள நாடு­கள் குளிர்­கா­லத்தை அனு­பவிக்­கும். அத­னால் வடக்கு ஆசி­யா­வில் அமைந்­துள்ள ரஷ்­யா­வின் சைபீ­ரியா போன்ற பகு­தி­களில் குளிர்க் காற்று வீசும். அந்­தக் காற்­றில் ஈரத் தன்­மை­ அதி­கம் இருக்­காது.

அங்­கி­ருந்து வரும் காற்று இந்­தப் பகுதிக்கு வரும்போது அதன் ஈரத்­தன்மை அதி­க­ரிக்­கும். அத­னால் சிங்­கப்­பூர் உட்­பட உல­கின் நடு­வில் உள்ள 'இக்­கு­வேட்­டர்' பகு­திக்கு மேல் கார்­மே­கங்­கள் உரு­வா­கும்.

இத­னால் சில நாள்­களுக்கு மழை பொழிந்த வண்­ணம் இருக்­கும்.