நிறுவனங்களிடம் முன்பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின்
தலைவர் திரு மெல்வின் யோங் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டிலிருந்து முன்பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் மொத்தம் $3 மில்லியன்
இழந்துள்ளதாகச் சங்கத்தின்
தரவுகள் காட்டுகின்றன,
நிறுவனம் நொடித்துப்போவதற்கு முன்பு, முன்பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்குத்
தற்போதைய சட்டத்தின்கீழ் போதுமான பாதுகாப்பு இல்லை என்றார் திரு யோங்.
நொடித்துப்போன நிறுவனம் மூடப்படுதற்கு முன்பு முதலில் வங்கிகள், ஊழியர்களுக்குப் பணம் கொடுக்கப்படும் என்றும் மீதமுள்ள பணத்தைக் கொண்டுதான் வாடிக்கையாளர் களுக்குப் பிரித்துத் தரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

