பொருள்களுக்கும் சேவைகளுக்கும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் கூறியுள்ளார். 2019ஆம் ஆண்டிலிருந்து பயனீட்டாளர்கள் மூன்று மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளதாக பயனீட்டாளர் சங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.
நொடித்துப்போன நிறுவனங்களுக்குப் பயனீட்டாளர்கள் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தியிருக்கலாம். அத்தகையோருக்குத் தற்போது நடப்பில் இருக்கும் சட்டங்கள் போதுமான பாதுகாப்பை வழங்காமல் இருக்கலாம் என்று திரு யோங் குறிப்பிட்டார்.
பொதுவாக நொடித்துப்போன நிறுவனங்கள் முதலில் ஊழியர்களுக்குத் தரவேண்டிய தொகையைக் கொடுக்கும், கடன் வழங்கிய வங்கிகள் போன்றவற்றிடம் பணத்தைத் திரும்பித் தரும். அதற்குப் பிறகு எஞ்சியுள்ள தொகைதான் வாடிக்கையாளர்கள், அலுவலக இட உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் இயங்கிய நிறுவனங்கள் நோடித்துப்போனபோது பயனீட்டாளர்கள் அதிக பணத்தை இழந்தனர். எடுத்துக்காட்டாக, 2020ஆம் ஆண்டு 'எஸ்டிஏ டிராவல்' நிறுவனம் நொடித்துப்போனதாகத் தெரிவிக்கப்பட்டது. தனது வாடிக்கையாளர்களுக்கும் முன்னாள் ஊழியர்களுக்கும் அது ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை வழங்கவேண்டியிருந்தது.
"முன்கூட்டியே கட்டணம் செலுத்தி அதிக பணத்தை இழக்கும் பயனீட்டாளர்களைக் கொ துறைகளில் நடப்பதை ஆராய்ந்து வர்த்தக, தொழில் அமைச்சு அவற்றில் முன்கூட்டியே கட்டணம் செலுத்துவதற்கான பாதுகாப்பைக் கட்டாயப்படுத்தும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளேன்," என்று திரு யோங் கூறினார். இதன்படி, நிறுவனங்கள் மூடப்பட்டால் பயனீட்டாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குக் கூடுதல் விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகள் வழங்கும்படி வர்த்தக, தொழில் அமைச்சு செய்யலாம்.
அதிக புகார்கள் வரும் துறைகளுக்கென கூட்டு அங்கீகார திட்டங்களை வரைய வர்த்தக சங்கங்கள் உள்ளிட்டவற்றுடன் பயனீட்டாளர் சங்கம் இணைந்து செயல்படுவதாகத் திரு யோங் தெரிவித்தார்.
உடற்பிடிப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், புதுப்பிப்புப் பணி நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்த ஏற்பாட்டில் அடங்கும்.