தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'விடிஎல்' பயணிகளுக்கான பரிசோதனை ஏற்பாடு நீட்டிப்பு

1 mins read
3d39cf0d-f4e5-4796-990f-852a92b1405e
-

தடுப்­பூசி போட்­டுக்கொண்டோருக்­கான பய­ணப்­பாதை வழி­யாக (விடி­எல்) சிங்­கப்­பூர் வ­ரு­வோருக்கு உரிய பரி­சோ­தனை ஏற்­பா­டு­கள் மேலும் நான்கு வாரங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­படும்.

மேம்­ப­டுத்­தப்­பட்ட அந்த ஏற்பாடு, முதன் முத­லாக கடந்த டிசம்­பர் 6ஆம் தேதி நான்கு வார காலத்­திற்கு நடப்­புக்கு வந்­தது.

அது, வெளிநாடு­களிலிருந்து விடி­எல் வழி வரு­வோருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்­ப­தைக் கண்­ட­றி­வ­தில் உதவி இருக்­கிறது.

அத­னால் தொற்று குறைந்­துள்ளது என்று அமைச்சு தெரி­வித்தது.

சிங்­கப்­பூ­ரில் வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­களில் 912 பேருக்கு ஓமிக்­ரான் உறு­தி­யா­னது.

அவர்­களில் 685 பேருக்­குத் தொற்று இருந்­தது என்­பது, விடிஎல் பய­ணி­க­ளுக்­கான மேம்­படுத்­தப்­பட்ட பரி­சோ­தனை ஏற்­பாடு மூலம் தெரி­ய­வந்­தது.

ஆகை­யால், இந்த ஏற்­பாடு மேலும் நான்கு வாரங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­படும் என்­றும் சூழ்­நிலை எப்­படி பரி­ண­மிக்­கிறது என்­பது பரி­சீ­லிக்­கப்­படும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

மேம்­ப­டுத்­தப்­பட்ட பரி­சோதனை ஏற்­பாட்­டின்படி, விடி­எல் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு வரும் பயணி­கள் ஏழு நாட்­கள் அன்றாடம் பரிசோத­னைக்கு உட்­பட வேண்­டும்.

விடி­எல் விமான வழி வரு­வோர் தரை இறங்­கி­ய­தும் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்துகொள்ள வேண்­டும்.

விடி­எல் தரை வழி வரு­வோர் அதி­கா­ரி­க­ளின் கண்­கா­ணிப்புடன்­கூ­டிய ஏஆர்டி பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். 2வது, 4வது, 5வது, 6வது நாள்களில் அவர்­கள் தங்­கள் தங்­கு­மி­டத்­தில் சுய­மாக பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

இந்­தப் பய­ணி­கள் 3வது, 7வது நாள்­களில் பரி­சோ­தனை நிலை­யத்­தில் அதிகா­ரி­க­ளின் மேற்­பார்­வை­யில் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்டும்.