இந்த மாதம் 950,000 வீவக குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி, பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி

இந்த மாதம் 950,000 வீவக குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி, பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி

2 mins read
74efcacf-7de3-44ec-a15a-034355462bff
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிக்­கும் ஏறக்­கு­றைய 950,000 குடும்­பங்­க­ளுக்கு இந்த மாதம் ஜிஎஸ்டி-பய­னீட்­டுச் செலவை ஈடு­செய்ய உத­வும் பற்­றுச்­சீட்டு கிடைக்­கும்.

கொவிட்-19 சூழ­லில் குறைந்த, நடுத்­தர வருமானக் குடும்­பங்­களுக்கு உத­வும் வகை­யில் இந்த நிதியாண்­டில் இத்­து­டன் ஆறா­வது முறை­யாக இந்த உதவி வழங்­கப்­படு­கிறது.

தகுதி பெறும் குடும்­பங்­கள், தங்­கள் வீட்­டின் அள­வுக்கு ஏற்ப, சென்ற ஆண்டு ஏப்­ரல், ஜூலை அக்­டோ­பர் மாதங்­களில் கட்­ட­ணத் தள்ளுபடியைப் பெற்று இருக்­கும்.

அவற்­றோடு ஏப்­ரல், ஜூலை­யில் அவற்­றுக்கு இரண்டு முறை சிறப்பு நிதி உத­வி­யும் கிடைத்­தது.

எல்­லா­வற்­றை­யம் சேர்த்து குடும்­பங்­க­ளுக்கு மொத்­தம் $460 மில்­லி­யன் கொடுக்­கப்­ப­டு­வ­தாக நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது. இந்த மாதம் ஓரறை, ஈரறை வீடு­களில் வசிப்­போ­ருக்கு $95 கட்­ட­ணத் தள்ளுபடி கிடைக்­கும்.

மூவறை வீட்­டில் வசிப்­போ­ருக்கு $85; நாலறை வீட்­டு­வா­சி­க­ளுக்கு $75 கிடைக்­கும். ஐந்­தறை வீட்­டுக்­கா­ரர்­கள் கட்­ட­ணக் கழி­வாக $65 பெறு­வர். பல­த­லை­முறை அல்­லது எக்ஸி­கி­யூட்­டிவ் வீட்­டு­வா­சி­களுக்கு இது $55 ஆக இருக்­கும்.

ஒன்­றுக்கு மேற்­பட்ட சொத்து­களைக் கொண்­டுள்ள உறுப்­பினர் உள்ள குடும்­பங்­க­ளுக்கு இந்த உதவி கிடைக்­காது.

வீவக குடும்­பங்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்­டுள்ள மொத்த ஜிஎஸ்டி, பய­னீட்­டுக் கட்­ட­ணக் கழி­வைக் கணக்­கிட்­டுப் பார்த்­தால் வீவக குடும்­பத்­தி­னர் தங்­கள் வீட்டின் அள­வைப் பொறுத்து $355 முதல் $595 வரை பெற்று இருப்­ப­தாக அமைச்சு தெரிவித்­தது.

குறைந்த, நடுத்­தர வரு­மா­னக் குடும்பங்­கள், ஜிஎஸ்டி வரி எனப்­படும் விலை­பொ­ருள் சேவை வரிச் செல­வில் ஒரு பகு­தியை ஈடு செய்ய உதவியாக ஜிஎஸ்டி- பயனீட்­டுக் கட்­ட­ணக் கழிவு ஏற்­பாடு, 2012ல் நிரந்­த­ர­மான ஓர் ஏற்­பா­டாக ஆக்­கப்­பட்­டது.

இது ரொக்­க­மாகவும் மெடி­சேவ் எனப்­படும் மருத்­துவக் கணக்­கில் பணம் போடு­வது, பய­னீட்­டுக் கட்­ட­ணக் கழிவை வழ­ங்கு­வது ஆகிய வழியாகவும் மொத்தம் மூன்று வழி­களில் கொடுக்­கப்­படு­கிறது.

அர­சு, கடந்த 2020 நிதி­யாண்­டில் ஜிஎஸ்டி வரி-பய­னீட்டுக் கட்­ட­ணக் கழிவு ஏற்­பாடு மூலம் $630 மில்­லி­யன் கொடுத்­தது.