கேளிக்கை விடுதிகளில் விதிமீறல்கள்: 131 பேரிடம் விசாரணை

கேளிக்கை விடுதிகளில் விதிமீறல்கள்: 131 பேரிடம் விசாரணை

1 mins read
ecf5b85a-b4cb-4c99-aff3-93b5df89ab83
அந்தரங்க அறைகளுடன் கூடிய உரிமம் பெறாத கேடிவி இரவுநேரக் கேளிக்கை விடுதியிலும் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். படம்: சிங்கப்பூர் காவல்துறை -

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, சிங்­கப்­பூர் பயணத்துறைக் கழ­கம், நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­க­ளின் உத­வி­யு­டன் தங்­ளின் காவல்­துறை பிரிவு அதி­கா­ரி­கள் சென்ற மாதம் 24ஆம் தேதி­யும் 25ஆம் தேதி­யும் 29 நிலை­யங்­களில் எடுத்த நட­வடிக்கைகளைத் தொடர்ந்து 131 பேர் விசா­ரிக்­கப்­படு­கி­றார்­கள்.

உரி­மம் பெற்ற, உரி­மம் பெறாத பொது பொழு­து­போக்கு மற்­றும் இர­வு­நேர கேளிக்கை விடு­தி­களில் சோதனைகள் நடத்­தப்­பட்­டன.

விசா­ரிக்­கப்­பட்டு வரும் ஆட­வர்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் வயது 16 முதல் 44 வரை என்று காவல்­துறை தெரி­வித்­தது.

பாது­காப்பு இடை­வெளி நிபந்­த­னையை மீறி­யது உள்­ளிட்ட பல்வேறு குற்­றச்­செ­யல்­கள் தொடர்­பில் அவர்­கள் விசா­ரிக்­கப்­படு­கிறார்­கள்.

சோஃபியா ரோடு, ரிவர் வேலி ரோடு ஆர்ச்­சர்ட் ரோட்டில் செயல்­பட்ட விடு­தி­கள் சோத­னைக்கு உள்ளான இடங்­களில் அடங்கும்.