தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் உச்சத்தில் பறக்கிறது

2 mins read
b469db9d-491a-4365-8bea-94c8224bbf3b
-

சிங்­கப்­பூ­ரின் சாங்கி விமான நிலை­யம், சரக்குப் போக்­கு­வ­ரத்து அதி­க­ரிப்­பால் மீண்­டும் உச்­சத்­தில் பறந்து வரு­கிறது.

கொள்­ளை­நோய் கார­ண­மாக உலகம் முழுவதும் விநி­யோ­கிப்­புச் சங்­கிலி பாதிக்­கப்­பட்­டது. இதனால் தேவை அதி­க­ரித்­தது. மின்­வர்த்­த­கம் பெரு­ம­ளவு கூடி­யது. விமா­னச் ­சரக்­குப் போக்­கு­வ­ரத்­துக்­கான தேவையும் அதி­க­ரித்­தது.

சாங்கி குழு­மம் வெளி­யிட்ட புள்ளி விவ­ரங்­க­ளின்­படி 2021ல் ஜன­வரி முதல் நவம்­பர் வரை­யில் விமா­னச் சரக்­குப் போக்­கு­வ­ரத்து 1.76 மில்­லி­யன் டன்னை எட்­டி­யது. கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு முந்­தைய காலக்­கட்­டத்­தில் 2019ல் அது 1.84 மில்­லி­யன் டன்­னாக இருந்­தது.

இதில் 96 விழுக்காடு சரக்குப் போக்குவரத்து 2021ல் நடந்துள்ளது.

அதே சமயத்தில் 2020 ஜன­வரி முதல் நவம்­பர் வரை­யில் கையா­ளப்­பட்ட 1.4 மில்­லி­யன் டன்­னு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 26 விழுக்­காடு அதி­கம்.

2019ல் கையா­ளப்­பட்ட சரக்­கு ­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2020 முழு ஆண்­டுக்­கான சரக்­குப் போக்கு வ­ரத்து 1.54 டன்­னாக குறைந்­தது. 2020ல்தான் கிரு­மிப் பர­வல் உச்சக்­ கட்­டத்­தில் இருந்­தது. கொள்­ளை­நோய்க்கு எதி­ரான தீவிரக் கட்­டுப் ­பா­டு­களும் முடக்­கங்­களும் உலகம் முழுவதும் அமல்ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. கொள்­ளை­நோய்க்கு முன்பு இருந்த விமான ஏற்­று­மதி, இறக்குதி ­யை­விட கடந்த ஆண்டு ஜன­வரி முதல் நவம்­பர் வரை­யில் அது எட்டு விழுக்­காடு அதி­க­ரித்­தது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மற்றும் அக்­டோ­ப­ரில் 2019ஆம் ஆண்­டில் கையா­ளப்­பட்ட சரக்கின் அள­வையும் தாண்டிவிட்­டதாக சாங்கி விமான நிலையக் குழு­மம் தெரிவித்தது.

விமா­னச் சரக்­குப் போக்­கு­வரத்­ துக்கு ஏற்­று­மதி, இறக்­கு­மதி, கப்­பல் சரக்­குப் போக்­கு­வ­ரத்து ஆகி­யவை முக்­கி­ய கூறுகளாக உள்ளன.

2021 டிசம்­ப­ரின் முதல் வாரத்­தில் மட்­டும் சாங்கி விமான நிலை­யத்­தில் 1,000 வாரந்­திர சரக்கு விமா­னச் சேவை­கள் நடை­பெற்­றன. இதில் பய­ணி­க­ளுக்­கான விமா­னங்­கள் சரக்கு விமா­னங்­க­ளாக மாற்றப்­ பட்ட சேவை­களும் அடங்­கும்.

எழு­ப­துக்­கும் மேற்­பட்ட உலக நக­ரங்­க­ளுக்கு சாங்கி, சரக்குகளைக் கையாண்டுள்ளது.

இது, 2019 டிசம்­பர் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் மும்­ம­டங்­கு அதிகமாகும்.