இயற்கைக்குக் குரல்கொடுக்கும் லாவண்யா

கி. ஜனார்த்­த­னன்

தன்­னைச் சுற்­றி­யி­ருப்­போ­ருக்கு இயற்­கைப் பாது­காப்பு பற்­றிய விழிப்­பு­ணர்வு போத­வில்லை என்ற ஆதங்­கம் லாவண்­யா­வுக்கு இருந்­தது. அத­னாலேயே 20 வயது லாவண்யா பிரகாஷ், ஓயா பிர­சா­ரம் ஒன்­றில் ஈடு­ப­டத் தொடங்­கி­னார்.

லாவண்யா தனது உணர்­வு­களை முத­லில் தன் கேம­ரா­வில் எடுத்த படங்­கள் வழி காட்­டத் தொடங்­கினார். நாள­டை­வில் எழுத்­தி­லும் உரை­க­ளி­லும் அவ­ரின் பிர­சா­ரம் தொடர்ந்து அனைத்­து­ல­கச் சமூ­கத்­தின் பாராட்­டைப் பெற்­றன.

தன் 'மை நேச்­சர் எக்ஸ்­பி­ரி­யன்­சஸ்' வலைத்­த­ளத்­தில் தனது அனு­பவங்­க­ளைப் பற்றி பதி­வி­டத் தொடங்கி­னார்.

அத்­து­டன் அவர் இயற்­கைப் பாது­காப்பு தொடர்­பான உல­கச் செய்­தி­களைப் பற்றி 116 பதி­வு­களை வெளி­யிட்­டும் உள்­ளார்.

எளி­மை­யாக, உணர்­வு­பூர்­வ­மாக, எழுத்து நடை­யில் அமைந்த இவ­ரின் பதி­வு­களை, 163 நாடு­க­ளைச் சேர்ந்த 170,000க்கும் அதி­க­மா­னோர் பார்­வை­யிட்­டுள்­ள­னர்.

லாப நோக்­கற்ற 'டெட் சிங்­கப்­பூர்' அமைப்­பின் ஏற்­பாட்­டில் குறு­கிய, சக்தி­வாய்ந்த உரை­களை லாவண்யா நிகழ்த்­தி­யும் உள்­ளார்.

மக்­கள் நட­மாட்­டம் அதி­க­முள்ள நக­ர­மாக சிங்­கப்­பூர் இருந்­தா­லும் இங்­குள்ள தாவர, விலங்கு உயி­ரி­னங்­களின் பன்­மு­கத்­தன்மை தொடர்­பான விழிப்­பு­ணர்­வைத் தான் ஏற்­ப­டுத்த விரும்பி உரை நிகழ்த்­தி­ய­தாக லாவண்யா கூறி­னார்.

சிறு வய­தி­லி­ருந்தே இயற்கை எழி­லால் ஈர்க்­கப்­பட்ட லாவண்யா, புகைப்­படங்­களை எவ்­வாறு எடுப்­ப­தென்று முத­லில் கற்­றுக்­கொண்­டார்.

"சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­யத்­தின் வகுப்­பு­கள், 'கோடெக்' நிறு­வனத்­தின் வகுப்­பு­கள் ஆகி­ய­வற்­றில் சேர்ந்­தேன். புகைப்­ப­டக் கலை­யைக் கற்­றுக்­கொண்­டேன்," என்று அவர் கூறி­னார்.

புக்­கிட் தீமா இயற்­கைப் பாது­காப்பு வனப்­ப­குதி, மத்­திய நீர்ப்­பி­டிப்பு இயற்­கைப் பாது­காப்பு வனப்­ப­குதி, லாப்ரடோர் இயற்­கைப் பாது­காப்பு வனப்­ப­குதி மற்­றும் சுங்கை புலோ ஈர­நி­லப் பாது­காப்பு வனப்­ப­குதி ஆகி­ய­வற்­றி­லும் சிங்­கப்­பூ­ரி­லுள்ள கிட்­டத்­தட்ட 50 பூங்­காக்­க­ளி­லும் லாவண்யா 12 வய­து­மு­தல் படங்­கள் பிடித்து அவற்­றைப் படத்­தொ­குப்­பு­க­ளாக உரு­வாக்கி வந்­தார்.

வலைத்­த­ளத்­தில் அவற்றை ஒட்டி லாவண்யா பதி­விட்ட கட்­டு­ரை­கள், வாச­கர்­க­ளி­டையே பெரும் வர­வேற்­பைப் பெற்­றன.

இவ்­வாண்டு நவம்­பர் மாதத்­தின்­போது நடை­பெற்ற ஐக்­கிய நாட்டு மாநாட்­டைத் தான் வர­லாற்­றுச் சிறப்பு­மிக்க நிகழ்­வா­கத் தான் கரு­து­வ­தாக லாவண்யா பகிர்ந்­து­கொண்­டார்.

"உல­க­ள­வில் ஆரோக்­கி­ய­மான கரி­ய­மில வெளி­யீட்­டுத் சந்­தையை உரு­வாக்­கு­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­யில் சிங்­கப்­பூர் மும்­மு­ர­மா­கப் பங்­கேற்­றுள்­ளது.

"2050க்குள் நிலக்­க­ரி­யின் பயன்­பாட்டை முற்­றி­லும் நிறுத்த உள்­ள­தா­க­வும் 'மித்தேன்' வெளி­யீட்­டைக் குறைக்­க­வி­ருப்­ப­தா­க­வும் சிங்­கப்­பூர் உறு­தி­ய­ளித்­துள்­ளது. சுற்­றுச்­சூ­ழல் தொடர்­பில் சிங்­கப்­பூர் கொண்­டுள்ள கடப்­பாட்டை இது காட்­டு­கிறது," என்­றார் லாவண்யா.

ஆயி­னும், சிங்­கப்­பூர் தனது எரி­சக்தி தேவை­க­ளுக்­காக இன்­ன­மும் புதை­ப­டிம எரி­பொ­ருள்­களை (fossil fuels) பெரி­த­ள­வில் நம்­பி­யுள்­ளது. சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்­கும் வகை­யில் மாற்று வழி­களை மேலும் அதி­க­மாக நாடு­வது நல்­லது என்­றார் இந்த இளை­யர்.

அத்­து­டன் கப்­பல் துறை­யிலும் விமா­னத்­து­றை­யி­லும் ஏற்­படும் தூய்­மைக்­கேட்­டைக் கட்­டுப்­ப­டுத்த சிங்­கப்­பூர் கூடு­தல் நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என இவர் கரு­து­கிறார்.

இங்­கி­லாந்­தில் பிறந்த லாவண்யா, மூன்று வயது­மு­தல் சிங்­கப்­பூ­ரில் வளர்ந்­த­வர். சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தற்­போது சுற்­றுப்­பு­றம், வர்த்­த­கம் தொடர்­பில் பயின்­று­வ­ரும் லாவண்யா, நீடித்த நிலைத்­தன்­மை­யுடைய வர்த்­த­கச் செயல்­மு­றை­களை உரு­வாக்­கு­வதில் ஆர்­வம் கொண்­டுள்­ளார்.

படங்­கள்:

லாவண்யா பிர­காஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!