தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்மாயில் கஃபூர் ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை

2 mins read
92249a41-92c1-48a7-86aa-fae15e37e58e
டிசம்பர் 28ஆம் தேதி 'ஒன் ஃபேரர்' ஹோட்டலில் நடந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியில் 'புரோப்நெக்ஸ்' தலைமை நிர்வாக அதிகாரி இஸ்மாயில் கஃபூரின் தந்தையான 97 வயது அப்துல் கஃபூருடன் உரையாடுகிறார் மெண்டாக்கியின் தலைமை நிர்வாகி திருவாட்டி ஸுரைதா அப்துல்லா. வலக்கோடியில் தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.படம்: பெரித்தா ஹரியான் -

700 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள்; அமைச்சர் பாராட்டு

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

மலாய்/முஸ்­லிம் சமூ­கத்­தைச் சேர்ந்த 700 மாண­வர்­க­ளின் கல்வி மேம்­பாட்­டுக்­காக $1 மில்­லி­யன் நிதியை மெண்­டாக்கி நிர்­வ­கிக்­கும் கல்வி அற­நி­திக்கு வழங்­கி­யுள்­ளார் 'புரோப்­நெக்ஸ்' சொத்து முக­வர் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரியான முக­மது இஸ்­மா­யில் கஃபூர்.

தமது 97 வயது தந்தை திரு அப்­துல் கஃபூரின் பெய­ரில் அவர் வழங்கியுள்ள இந்நிதி­யின் மூலம், 'மெண்­டாக்கி-கஃபூர் புரோப்­நெக்ஸ்' கல்வி உப­கா­ரச் சம்­ப­ளம், 'இடி­எஃப்-கஃபூர் புரோப்­நெக்ஸ்' கல்வி உதவி நிதி மற்­றும் கணக்­குப் பாட உதவி நிதி' எனும் இரு திட்­டங்­கள் அமைக்­கப்­படும்.

தொடக்­கப்­பள்ளி மாண­வர்­களுக்­கு கணக்­குப் பாட உதவி நிதி பயனளிக்கும். தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கங்­கள், பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் பயி­லும் மாண­வர்­க­ளுக்­கு கல்வி உதவி நிதி பலன் தரும். பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயி­லும் மாண­வர்­கள் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெறும் வாய்ப்பு கிடைக்­கும்.

"செய்­தித்­தாள் விநி­யோ­கம், ஒட்­டுக்­கடை நடத்­தி­யது உட்­பட பல வேலை­க­ளைச் செய்து வாழ்­வில் சிர­மப்­பட்டு வந்­த­வர் என் தந்தை. சமூ­கத்­தின் ஆத­ர­வில் முன்­னேற்­றம் அடைந்த நான், சமூ­கத்­திற்­குத் திருப்பி நன்மை செய்ய கடப்­பாடு கொண்­டுள்­ளேன்.

"என் தந்­தை­யின் பெய­ரில் இந்­தத் திட்­டத்தை அமைப்­ப­தில் பெரும் மகிழ்ச்சி அடை­கி­றேன்," என்று கூறி­னார் திரு இஸ்­மா­யில் கஃபூர்.

இந்த நிதியை அமைக்­கும் பங்­கா­ளித்­துவ இணக்க நிகழ்ச்சி கடந்த மாதம் 28ஆம் தேதி 'ஒன் ஃபேரர்' ஹோட்­ட­லில் நடந்­தது.

அப்­போது மெண்­டாக்கி அமைப்­புக்­கும் இஸ்­மா­யில் கஃபூருக்­கும் இடை­யில் இணக்­கக் குறிப்பு கை யெழுத்­தா­னது. அந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு சிறப்­பித்த மெண்­டாக்­கி­யின் தலை­வ­ரும் தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்­ச­ரு­மான ஸாக்கி முகம்­மது, இஸ்­மா­யில் கஃபூரின் பெருந்­தன்­மை­யைப் பாராட்டி, மேலும் பலர் சமூ­கத்­திற்­காக வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்த முன்­வ­ர­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

2021ஆம் ஆண்டு முழு­வ­தும் $2 மில்­லி­யனை சமூ­கத்­திற்கு இஸ்­மா­யில் கஃபூர் வழங்­கி­யுள்­ளார்.

இதைப் போல அனைத்து சமூ­கத்­தி­ன­ருக்­கும் ஆத­ர­வுக் கரம் நீட்ட எண்­ணம் கொண்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார். சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய சொத்து முக­வர் நிறு­வ­ன­மான புரோப்­நெக்­ஸில் தற்­போது 10,800 முக­வர்­கள் உள்­ள­னர்.