கடந்த ஆண்டில் தனியார் வீட்டு விலை 10.6% அதிகரிப்பு

கடந்த ஆண்டில் தனியார் வீட்டு விலை 10.6% அதிகரிப்பு

1 mins read
14d0c759-eee9-47ad-ac11-892a896b977a
-

சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் வேகம் கூடியது.

சென்ற ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரைப்பட்ட காலத்தில், முந்தைய காலாண்டைவிட 5 விழுக்காடு விலை அதிகரித்தது.

மொத்தத்தில் சென்ற ஆண்டில் தனியார் வீட்டு விலை 10.6% அதிகரித்து உள்ளது. இந்த உயர்வு 2010க்குப் பிறகு இடம்பெற்றுள்ள ஆக அதிகமானது என்பது தெரியவந்துள்ளது. நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பூர்வாங்க மதிப்பீடுகள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவந்துள்ளன.

தனியார் வீட்டு விலை தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. சென்ற ஆண்டு மூன்றாவது காலாண்டில் விலை 1.1 விழுக்காடு கூடியது.

அந்த அதிகரிப்பு 2வது காலாண்டில் 0.8% ஆக இருந்தது. முதல் காலாண்டில் தனியார் வீட்டு விலை 3.3% கூடியது. கடைசி காலாண்டில் தரை வீடுகளின் விலை 3.7% அதிகரித்தது. அடுக்குமாடி வீடுகளின் விலை 5.4% கூடியது.

இதனிடையே, நான்காவது காலாண்டில் $15 மில்லியனுக்கும் அதிக விலையுடன் கூடிய பரிவர்த்தனைகள், 3வது காலாண்டைவிட அதிகமாக இடம்பெற்றதாக 'ஓமைஹோம்' நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுத் துறை வல்லுநர் திரு மோகன் சுந்தரசேகரன் கூறினார்.