கொடுக்க வேண்டிய பணத்தை நிறுவனங்கள் சரியாகக் கொடுக்கும் போக்கு மேம்பாடு

2 mins read
0a048af8-f880-414f-b8b3-77052bf5375f
-

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் நிறு­வ­னங்­கள், தாங்­கள் கொடுக்­க­வேண்­டிய பணத்தை குறித்த காலத்­தில் கொடுத்­து­வி­டும் போக்கு கொஞ்­சம் மேம்­பட்டு இருக்­கிறது.

நிறு­வ­னங்­கள் தொடர்ந்­தாற்­போல் இரண்டு காலாண்­டு­க­ளாக பணத்தை உரிய நேரத்­தில் கொடுக்க முடி­யா­மல் தவித்து வந்­தன. காலாண்டு அடிப்­ப­டை­யில் இப்­போது இதில் எல்லா துறை­களி­லுமே கொஞ்­சம் முன்­னேற்­றம் ஏற்­பட்டு இருப்­ப­தாக சிங்­கப்­பூர் வர்த்­தக, கடன்­பற்று இலாகா நேற்று தெரி­வித்­தது.

ஆண்டு முடிவு விழா­க்கா­லம் கார­ண­மாக சில்­லறை, சேவைத் துறை­களில் பணப்­பு­ழக்­கம் கொஞ்­சம் மேம்­பட்­டது. இத­னால் நிறு­வனங்­கள் கொடுக்­க­வேண்­டிய பணத்­தைத் தாம­த­மா­கக் கொடுப்­பது கொஞ்­சம் குறைந்­தது.

உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளின் பணம் செலுத்­தும் செயல்­தி­றன் மேம்­பட்டு இருக்­கிறது என்­ப­தற்­கான கண்­கூ­டான அறி­கு­றி­கள் தெரி­வ­தாக 'டன் அண்ட் பிராட்ஸ்திரீட் சிங்­கப்­பூர்' நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஆட்ரே சியா தெரி­வித்­தார்.

நிறு­வ­னங்­கள் ஒப்புக்கொண்டபடி கொடுக்­க­வேண்டிய பணத்தை உரிய நேரத்­தில் கொடுக்­கா­மல் தாம­த­மாக கொடுக்­கும் நடை­முறை சென்ற ஆண்­டின் 4வது காலாண்­டில் 44.3 விழுக்­கா­டா­கக் குறைந்து இருக்­கிறது. இது 3வது காலாண்­டில் 44.9% ஆக இருந்­தது.

இத­னி­டையே, குறித்த நேரத்தில் பணத்­தைக் கொடுத்­து­வி­டும் போக்கு 4வது காலாண்­டில் 40.8% ஆகக் கூடி­யது. இது அதற்கு முந்தைய காலாண்­டில் 40.5% ஆக இருந்­தது.

கொடுக்­க­வேண்­டிய பணத்­தில் ஒரு பகு­தியை மட்­டும் கொடுக்­கும் போக்கு 4வது காலாண்­டில் 14.9% ஆக இருந்­தது. இது 3வது காலாண்­டில் 14.6% என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பல துறை­க­ளை­யும் பார்க்­கை­யில் எல்லா துறை­க­ளி­லுமே காலாண்டு அடிப்­ப­டை­யில் தாமத மான ­பரி­வர்த்­த­னை­கள் குறைந்து இருக்­கின்­றன.

உற்­பத்தி, மொத்த விற்­பனை துறை­களில் மட்­டும் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் தாமத பணப்­பட்­டு­வா­டாக்கள் குறைந்து இருக்­கின்றன.

உள்­ளூர் நிறு­வ­னங்­கள் ஒட்­டு­மொத்த பணப்­பட்­டு­வாடா செயல்­தி­றன் 2020ஐவிட சென்ற ஆண்­டில் கொஞ்­சம் மேம்­பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.