400 மின்சார டாக்சிகளை அறிமுகம் செய்கிறது கம்ஃபர்ட்டெல்குரோ

400 மின்சார டாக்சிகளை அறிமுகம் செய்கிறது கம்ஃபர்ட்டெல்குரோ

1 mins read
c73b23ae-67b9-41b1-948b-a286441b0031
-

சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய டாக்சி நிறு­வ­ன­மான கம்­ஃபர்ட்­டெல்­குரோ, முற்­றி­லும் மின்­சா­ரத்­தில் இயங்­கக்­கூ­டிய 400 டாக்­சி­களை இவ்­வாண்டு அறி­மு­கம் செய்­யப்­போ­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் இடம்­பெ­றும் பெரிய அள­வி­லான மின்­சார டாக்சி அறி­மு­க­மாக அது அமை­யும். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மின்­சார டாக்சி சாலை­களில் சோதிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் அது­கு­றித்த பெரிய அறி­விப்பை நேற்று கம்­ஃபர்ட்­ டெல்­குரோ வெளி­யிட்­டது.

வரும் 2023ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூர் சாலை­களில் 1,000 மின்­சார டாக்­சி­களை கம்­ஃபர்ட்­டெல்­குரோ ஓடச்­செய்­யும் என்று அந்­

நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஜேக்­சன் சியா, 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார். மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தற்போது சரியான நேரம் என தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்