செவித்திறன் குறைந்த நோயாளிகளுக்கு புதிய தொடர்பு வசதி

2 mins read
b6d0b45c-11e7-4fc7-9700-9369391fde39
-

செவித்­தி­ற­னற்ற அல்லது குறைபாடுடைய கொவிட்-19 நோயா­ளி­கள் இனி குறுந்­த­க­வல் வாயி­லா­கவோ மின்­னஞ்­சல் வாயி­லா­கவோ சுகா­தார அமைச்­சு­டன் தொடர்­பு­கொள்­ள­லாம்.

தொற்­றி­லி­ருந்து குண­ம­டை­யும் திட்­டங்­கள் குறித்து கொவிட்-19 நோயா­ளி­களை தொலை­பேசி வழி அமைச்சு தொடர்­பு­கொண்­ட­போது செவித்­தி­ற­னற்­ற­வர்­கள் தொலை­பே­சி­யில் பேசு­வது தங்­க­ளுக்­குச் சரி­வ­ராது என்று கூறி­னர்.

அத­னைத் தொடர்ந்து புதிய ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது. கேட்­கும் திற­னற்ற நோயா­ளி­கள் தொலை மருத்­து­வ­ரு­டன் காணொளி வழி­யா­கவோ வாட்ஸ்­அப் தக­வல் வழி­யா­கவோ தொடர்பு­ கொள்ள முடி­யும். தேைவப்­பட்­டால், சைகை மூலம் உரை­பெ­யர்ப்­போ­ரின் உத­வியை அவர்­கள் நாட­லாம்.

இது தொடர்­பான மேல்­வி­வ­ரங்­களை அமைச்­சின் நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹவு மாஸம் டிசம்­பர் 31ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.

"கொள்­ளை­நோ­யால் உரு­வான சவால்­களை எதிர்­கொள்­வ­தில் கேட்­கும் திறன் குறைந்த சமூ­கம் சிர­மப்­ப­டு­வதை அறி­வேன். சில குறிப்­பிட்ட சவால்­கள் மீதான தங்­

க­ளது கருத்­து­க­ளை­யும் எண்­ணங்­

க­ளை­யும் பகிர்ந்­து­கொண்­ட­தற்கு நன்றி தெரி­விக்­கி­றேன்.

"இல்­லத்­தி­லி­ருந்­த­வாறே குண­

ம­டை­யும் நோயா­ளி­களில் செவித்­தி­ற­னற்ற அல்­லது கேட்­ட­றி­வ­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கு­வோ­ருக்­காக கொவிட்-19 நிர்­வாக நடை­மு­றை­களில் மேம்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது.

"இதற்­காக சுகா­தார அமைச்சு, சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்சு மற்­றும் சிங்­கப்­பூர் செவித்­தி­ற­னற்­றோர் சங்­கம் ஆகி­யன பங்­கா­ளித்­து­வம் செய்­து­கொண்­டுள்­ளன," என்­றார் திரு­வாட்டி ரஹயு.

சுகா­தார அமைச்­சு­டன் குறுந்­த­க­வல் அல்­லது மின்­னஞ்­சல் வாயி­லா­கத் தொடர்­பு­கொண்­ட­தும் அதற்­கென பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்ள நிர்­வாகி ஒரு­வர் தொடர்புகொள்­வார்.

24 மணி நேரத் தொடர்­புக்கு எந்த மாதிரி தெரிவு தேவைப்­படும் என்று அவர் கேட்­ட­றி­வார். மேலும், அவ­ச­ர­கால உதவி நாட சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் தொடர்பு எண் குறுந்­த­க­வல் மூலம் அவர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும்.