சட்டவிரோதமாக தங்குமிடம் நடத்தியதில் சம்பந்தப்பட்ட கட்டுமான ஊழியருக்குச் சிறை, அபராதம்

சட்டவிரோதமாக தங்குமிடம் நடத்தியதில் சம்பந்தப்பட்ட கட்டுமான ஊழியருக்குச் சிறை, அபராதம்

1 mins read
68fbd6c7-7754-4e24-bce2-22013bc991da
நீதிமன்ற வளாகத்தில் ரைஹான் ஜாஹிர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தை சட்டவிரோதமாக நடத்தப்பட்டதில் சம்பந்தப்பட்ட கட்டுமான ஊழியர் ஒருவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் $24,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. கேலாங் கடைவீடு ஒன்றில் அவர் நடத்திய தங்குமிடத்தில் 2015ஆம் ஆண்டு தீவிபத்து ஏற்பட்டது. அதில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் மாண்டனர், மூவர் காயமடைந்தனர்.

குற்றவாளியான பங்ளாதேஷைச் சேர்ந்த 43 வயது ரைஹான் ஜாஹிர், தன் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

தகுந்த உரிமம் இல்லாமல் சம்பளத்திற்காக வேலை செய்தது, அனுமதியின்றி நிலத்தை மேம்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் சிந்திக்காமல் ஒரு செயலில் ஈடுபட்டது உட்பட மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டன.