தம்மிடம் வேலை செய்த பணிப்பெண்ணுக்கு 13 மாதங்களாக சம்பளம் தராத குற்றத்திற்காக சிங்கப்பூரரான 56 வயது சன்டா மரியா மிஷெல் தெரேசாவிற்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளை தெரேசா ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது மேலும் ஒன்பது குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெற்ற தகவல்களின்படி, 2013ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து இங்கு வந்த எம்ஃபெராட்ரிஸ் பொர்ஷா மொன்டஃபொல்கா எனும் பணிப்பெண்ணை வேலைக்கு எடுத்திருந்தார் தெரேசா.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 13 மாதங்களுக்கு அவர் அப்பணிப்பெண்ணுக்குச் சம்பளம் தரவில்லை என்பது தெரியவந்தது.