டியோ: கொள்ளைநோய் கற்பித்த பாடம் 'ஒற்றுமை'

டியோ: கொள்ளைநோய் கற்பித்த பாடம் 'ஒற்றுமை'

2 mins read
2794cfc6-85db-4b79-bffd-34edce192cb3
-

உல­க­ளா­விய பிரச்­சி­னை­களில் உலக நாடு­கள் சேர்ந்து செயல்­பட வேண்­டும் என்­ப­தையே அண்­மைய ஆண்­டு­க­ளாக கொள்­ளை­நோய் பாடம் கற்­பித்­துள்­ளது என்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் நடந்த வட்­டார எதிர்­கா­லம் பற்­றிய வரு­டாந்­திர இரண்டு நாள் கருத்­த­ரங்­கில் அவர் பேசி­னார்.

அப்­போது உலக நாடு­க­ளின் ஒன்­று­பட்ட ஒத்­து­ழைப்பு அவ­சி­யம் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து மீள்­வது, விநி­யோ­கச் சங்­கி­லிப் பாதிப்பு, பரு­வ­நிலை மாற்­றம் போன்ற பிரச்­சி­னை­களில் கூட்டு நட­வ­டிக்கை மற்­றும் உல­க­ளா­விய தீர்­வு­கள் தேவை என்­பது தெளி­வாக தெரி­கிறது," என்­றார் அவர்.

"உலக சுகா­தார நிறு­வ­னம் போன்ற உல­க­ளா­விய அமைப்­பு­ களுக்­கு உலக நாடு­க­ளின் ஒத்­து­ழைப்பை ஒருங்­கி­ணைப்­பது சவா­லாக இருந்­தது. இத­னால் பல­த­ரப்பு ஒத்­து­ழைப்பு பாதிக்­கப்­பட்­டது. இந்தப்போக்கு அனைத்­து­லக உறவு­ க­ளி­லும் எதிெரா­லித்தது," என்று திரு டியோ குறிப்­பிட்­டார்.

2008ல் நிதி நெருக்­கடி ஏற்­பட்­ட­போது பொரு­ளி­யலை நிலைப்­ப­டுத்த 'ஜி20' தலை­வர்­கள் ஒன்­று­பட்டு செயல்­பட்­ட­னர். அேதபோன்ற ஒத்­து­ழைப்பை கொள்­ளை­நோய் விவ­கா­ரத்­தில் பார்க்க முடி­ய­வில்லை என்­றும் அவர் சொன்னார்.

அமெ­ரிக்க-சீனா உறவு பற்றி பேசிய திரு டியோ, "இரு நாடு­களும் தங்­க­ளுக்கு இடை­யி­லா­ன பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­துக் கொள்­ளும் என மற்ற நாடு­கள் எதிர்­பார்க்­கின்­றன. ஆனால் தற்­போ­தைய கொள்­ளை­நோய், இரு நாடு­ க­ளுக்கு இடை­யி­லான போட்­டியை வேகப்­ப­டுத்­தி­யுள்­ளது.

"இரு வல்­ல­ரசு நாடு­களும் சுய ­ந­லம் பார்க்­கா­மல் உல­க­ளா­விய தலை­மைக்­குச் சேர்ந்து செயல்­பட்­டால் உல­க­ளா­விய சவால்­களை நாம் அனைவரும் சேர்ந்து எதிர்­கொள்ள உத­வி­யாக இருக்­கும்.

"அதே சம­யத்­தில் அமெ­ரிக்க, சீனா­வின் முயற்­சி­க­ளுக்­குக் காத்­தி­ரா­மல் சிறிய நாடு­கள் பங்­கா­ளித்துவ உறவை மேம்­ப­டுத்தி உல­க­ளா­விய ஒழுங்கை வடி­வ­மைக்­க­லாம்," என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

இதற்கு 11 நாடு­களை உள்­ள­டக்­கிய பசி­பிக் நாடு­க­ளுக்கு இடை­யி­லான விரி­வான முன்­னேற்ற உடன்­பாடு, புருணை, சிலி, சிங்­கப்­பூர் மற்­றும் நியூ­சி­லாந்து ஆகிய நாடு­களை உள்­ள­டக்­கிய ஒப்­பந்­தம், 15 நாடு­களை உள்­ள­டக்­கிய வட்­டார விரி­வான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­பாடு ஆகி­ய­வற்றை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

காப்­பு­றுதி, தடுப்­பூசி உற்­பத்­தி­யைப் பெருக்­கு­வ­தில் கூட்டு முத­லீடு உட்­பட இன்­னும் பல துறை­களில் வட்­டார நாடு­கள் சேர்ந்து செயல்­ப­ட­லாம் என்று மூத்த அமைச்சர் டியோ சி ஹியன் தெரி வித்துள்ளார்.