மலேசியாவில் உள்ள 'ஏட்வொர்க்ஸ்' நிறுவனத்தின் வர்த்தக வாடிக்கையாளர்கள் சிங்கப்பூரில் விளம்பரம் செய்ய வசதியாக அந்நிறுவனம், எஸ்பிஎச் மீடியா நிறுவனத்துடன் பாங்காளித்துவம் அமைத்துக்கொண்டுள்ளது.
'ஏட்வொர்க்ஸின்' வர்த்தகப் பங்காளிகளில் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் அடங்கும். இந்த பங்காளித்துவத்தின் வாயிலாக அவை சிங்கப்பூரில் எஸ்பிஎச் மீடியாவின் தளங்களில் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளலாம். வெளிப்புற சுவரொட்டி வகை விளம்பரங்கள், வானொலி விளம்பரங்கள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்யலாம்.
விளம்பரத் துறையில் எல்லை தாண்டிய இத்தகைய பங்காளித்துவம் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று இவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

