தமது மாற்றான் மகனை அடித்துத் துன்புறுத்தி காயப்படுத்திய ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுவனின் அடையாளத்தைக் காக்க தண்டனை விதிக்கப்பட்ட ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த 32 வயது ஆடவர் சிறுவனை அடித்ததால் அச்சிறு
வனுக்கு பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.
அதுமட்டுமல்லாது, காது
சவ்வும் கிழிந்தது.
சிறுவனின் வலது காதில் ஓராண்டுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிந்திருந்தும் அந்த ஆடவர் அதே காதில் அடித்தார்.
துன்புறுத்தல் காரணமாகப் பத்து நாட்களுக்கு மருத்துவ
மனையில் தங்கி சிகிச்சை பெறும் நிலை அச்சிறுவனுக்கு ஏற்பட்டது.
இந்தக் கடுமையான துன்
புறுத்தல்கள் காரணமாக சிறுவன் அதிக அளவில் பாதிக்கப்
பட்டுள்ளதாக அரசாங்க வழக்
கறிஞர் கூறினார்.