சிங்கப்பூர் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

சிங்கப்பூர் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

1 mins read
6e426913-bb7c-4253-a25b-94ef3187782f
-

இந்­தோ­னீ­சி­யா­வில் உள்ள சதுப்­பு நிலக் காடு­களில் புது­வகை சதுப்பு நில மரத்தை சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் இரண்டு விஞ்­ஞா­னி­கள் கண்டு­பி­டித்­துள்­ள­னர். இந்­தோ­னீசி­யா­வைச் சேர்ந்த ஒரு­வ­ரும் இவர்­க­ளு­டன் இந்­தச் சாத­னை­யில் இடம்­பெற்­றார்.

இதற்­குப் பின்­னால் இருக்­கும் குழு­வில் இடம்­பெற்­றுள்ள டாக்­டர் லாஹிரு விஜெ­தாசா, இந்­தக் கண்டு­பி­டிப்பு தற்­செ­ய­லா­னது என்று தெரி­வித்­தார். "2015ஆம் ஆண்டு இந்த மரங்­களை அடை­யா­ளம் கண்­டோம். ஆனால், பூக்­கள் இல்­லா­த­தால் இது புது­வகை சதுப்பு நில மரம்தானா என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சுற்றுப்புற ஆய்வுக் கழகத்தில் உள்ள இவர் கூறி­னார்.

இந்­தக் கண்­டு­பி­டிப்பு, அறி­வி­யல் சஞ்­சி­கை­யான 'பிட்­டோ­டாக்சா'வில் நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டது. 'டிச­பெ­லும் ரவா­கம்­புட்' எனும் இந்த சதுப்பு நில மரத்தை இந்த விஞ்­ஞா­னி­கள் கண்­டு­பி­டித்­த­னர். கிட்­டத்­தட்ட 60 ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக புது­வகை சதுப்பு நில மரம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன் 1963ல்தான் 'ஷொரியா ரெட்­டுசா' எனும் புது­வகை சதுப்பு நில மரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அது­வும் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்­தது.