பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்ய பணிக்குழு

பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்ய பணிக்குழு

2 mins read
b0db86f1-3655-4b5b-9bda-b56876ee59ff
-

பெற்­றோர் பரா­ம­ரிப்­புச் சட்­டம் கடந்த பல ஆண்­டு­க­ளாக நல்ல பல­னைத் தந்­துள்­ள­போ­தி­லும், வருங்­கா­லத்­தில் மூத்­தோ­ரி­டை­யி­லும் சமூ­கத்­தி­லும் எழும் தேவை­

க­ளைச் சமா­ளிக்­கும் வகை­யில் வலு­வாக்க அச்­சட்­டத்தை மறு­ஆய்வு செய்ய பணிக்­குழு ஒன்று நிறு­வப்­பட்­டுள்­ளது.

தங்­க­ளைத் தாங்­களே போது­மான அள­வுக்­குப் பரா­ம­ரித்­துக்­கொள்ள இய­லாத மூத்­தோர் தங்­க­ளது பிள்­ளை­க­ளி­டம் சட்­ட­பூர்வ பரா­ம­ரிப்பு கோர இச்­சட்­டம் வழி­வ­குக்­கிறது.

புதி­தாக ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்ள பணிக்­குழு மரின் பரேட் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறப்­பி­னர் சீ கியன் பெங் தலை­மை­யில் இயங்­கும். கவ­னிப்­புக் குழு விவா­தங்­களும் இணை­யம் வழி­யான ஆய்­வும் இம்­மா­தத்­தில் நடை­பெ­றும் பொது­மக்­க­ளை­யும் பொது அமைப்­பு­க­ளை­யும் கலந்து ஆலோ­சிக்­கும் வகை­யில் இவற்­றுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது.

புதிய சட்­டத்­தி­ருத்­தத்­திற்­கான தனி நபர் மசோ­தாவை இவ்­வாண்டு இறு­திக்­குள் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய திட்­ட­மி­டப்­பட்டு உள்­ள­தாக பணிக்­கு­ழு­வின் செய­ல­கம் நேற்று கூறி­யது.

ஆகக் கடை­சி­யாக, 2010ஆம் ஆண்­டில் பெற்­றோர் பரா­ம­ரிப்­புச் சட்­டம் திருத்­தம் செய்­யப்­பட்­டது. அப்­போது அதற்­கான தனி நபர் மசோ­தாவை திரு சீ தாக்­கல் செய்­தார்.

பரா­ம­ரிப்பு சச்­ச­ர­வு­க­ளுக்­குத் தீர்­வு­காண்­ப­தற்கு முன்­னர் சம­ர­சப் பேச்­சுக்கு முன்­னு­ரிமை வழங்க அப்­போது அந்­தச் சட்­டத்­தி­ருத்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

பரா­ம­ரிப்பு ஆணை விடுக்­கு­மாறு பெற்­றோர் பரா­ம­ரிப்­புக்­கான தீர்ப்­பா­யத்தை பெற்­றோர் அணு­கு­வ­தற்கு முன்­னர் அவர்­கள் தங்­க­ளது பிள்­ளை­க­ளு­டன் பெற்­றோர் பரா­ம­ரிப்­புக்­கான ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் சம­ர­சப் பேச்சு நடத்­த­வேண்­டும் என 2011 மார்ச் மாதம் முதல் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது. அதற்கு கைமேல் பலன் கிடைத்­தது.

அதன் பிறகு பரா­ம­ரிப்பு ஆணை கோரும் விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்கை சரி­யத் தொடங்­கி­யது.

2008க்கும் 2010க்கும் இடைப்­பட்ட மூன்­றாண்­டு­களில் சரா­ச­ரி­யாக 170 விண்­ணப்­பங்­கள் பெறப்­பட்ட நிலை­யில் 2011 முதல் 2013 வரை­யி­லான கால­கட்­டத்­தில் 86 என கிட்­டத்­தட்ட பாதி­யா­கக் குறைந்­தது.