சிறு வர்த்தகங்களுக்கு உதவும் வகையில் iShop@heartlands எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிர்வாகக் கழகத்தின் மக்கள் மேம்பாட்டு நிதி இந்தத் திட்டத்தைத் தொடங்கி அதற்கு நிதி வழங்கியுள்ளது.
புதிய திட்டத்தை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று பூன் லே கடைத்
தொகுதியில் தொடங்கிவைத்தார்.
வர்த்தகங்களில் ஆறு மாத வேலை அனுபவப் பயிற்சியில் ஈடுபடும் இளையர்களிடமிருந்து கடைக்காரர்கள் மின்வர்த்தகம் பற்றி கற்றுக்கொள்வர்.
இந்த வேலை அனுபவப் பயிற்சியில் சேரும் இளையர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

