கொஞ்சும் தமிழில் நூல்கள் தயாரிக்கும் தோழிகள்

பாவை சிவக்­கு­மார்

 

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லால் ஒரு கட்­டத்­தில் சிறு­வர் முதல் பெரி­ய­வர் வரை வீட்­டி­லேயே முடங்­கிக் கிடந்­த­னர். இளம் பிள்­ளை­கள் உள்ள உற்­ற தோழி­க­ளான உஷா கும­ரன், ரஸ்­மியா பானு இரு­வ­ருக்­கும் அதே நிலை ஏற்­பட்­டது. ஆனால் அச்­சூ­ழலை ஒரு வாய்ப்­பாக அவர்­கள் பயன்­ப­டுத்­திக்­கொண்டு புத்­தாக்க முயற்சி ஒன்­றில் இறங்­கி­னர். இரு­வ­ழித் தொடர்பு அம்­சம் கொண்ட குழந்­தை­க­ளுக்­கான தமிழ் புத்­த­கங்­களை இணைந்து தயா­ரித்­த­னர்.

திரு­மதி ரஸ்­மி­யா­வும் திரு­மதி உஷா­வும் கிட்­டத்­தட்ட 14 ஆண்டு கள் நெருங்­கிய நண்­பர்­கள். ஒரு சம­யம், திரு­மதி ரஸ்­மியா தன்­னு­டைய இரு இளம் பிள்­ளை­க­ளு­டன் திரு­மதி உஷா வீட்­டுக்­குச் சென்­றார். இரு­வ­ருக்­கும் இரண்டு வய­தில் பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள். குழந்­தை­க­ளுக்­காக எளி­மை­யான, இரு­வ­ழித் தொடர்பு அம்­சம் பொருந்­திய புத்­த­கங்­கள் ஆங்­கில மொழி­யில்­தான் அதி­கம் இருக்­கின்­றன என்­றும் தமி­ழில் அதி­கம் இல்லை என்­றும் இரு­வ­ரும் வருத்­தத்­து­டன் பகிர்ந்து­கொண்­ட­னர்.

இவ்­வாறு யதார்த்­த­மா­கத் தொடங்­கிய அந்த உரை­யா­டல், அவர்­க­ளின் புத்­தக உரு­வாக்­கத்­திற்கு வித்­தாக அமைந்­தது.

இரு­வ­ழித் தொடர்பு அம்­சம் கொண்ட புத்­த­கங்­களை, தமிழ் மொழி­யில் எவ்­வாறு தயா­ரிப்­பது என்ற ஆராய்ச்­சி­யில் தாய்­மார்­கள் இரு­வ­ரும் ஈடு­ப­டத் தொடங்­கி­னர்.

"வெவ்­வேறு வய­து­டைய பிள்­ளை­க­ளுக்கு ஏற்ற தொட்­டு­ணர் அம்­சங்­கள், அவர்­களை ஈர்க்­கும் வண்­ணங்­கள் போன்­ற­வற்றை ஆராய்ந்­தோம். உதா­ர­ணத்­திற்கு, புதி­தா­கப் பிறந்த குழந்­தை­யின் கண்­ணுக்கு அனைத்து நிறங்­களும் தெரி­யாது. அவர்­க­ளுக்கு ஏற்ற வண்­ணங்­க­ளைக் கண்­ட­றி­வ­தில் நாங்­கள் கவ­னம் செலுத்­தி­னோம்," என்று விளக்­கி­னார் ரஸ்­மியா.

புத்­த­கத்­தின் கருப்­பொ­ரு­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது, நூலில் இடம்­பெறும் ஓவி­யங்­களை வரை­யக்­கூ­டிய கலை­ஞ­ரைக் கண்­டு­பி­டிப்­பது, புத்­த­கத்தை அச்­சி­டும் இடம், புத்­தக வெளி­யீட்டு முறை போன்­ற­வற்­றுக்­குத் தங்­க­ளின் சொந்த நிதி­யைத் திரட்­டி­னர் தோழி­கள்.

"ஒவ்­வொரு பக்­கத்­தை­யும் நாங்­கள் மிக நுணுக்­க­மா­கத் திட்­ட­மிட்­டுத் தயா­ரித்­தோம். உதா­ர­ணத்­திற்கு, 'நிலா நிலா ஓடி வா' என்ற நூலில், ஒரு சிறு­மி­யின் படுக்கை அறை காட்­டப்­பட்­டி­ருக்­கும். அதில் வெறும் பொம்­மை­க­ளைக் காட்ட நாங்­கள் விரும்­ப­வில்லை. அறி­வி­யல், வானி­யல் போன்­ற­வற்­றில் சிறுமி­கள் ஈடு­பாடு காட்­ட­லாம் என்­ ப­தைக் காட்­டும் வகை­யில் விளை­யாட்­டுப் பொருள்­க­ளைச் சித்­தி­ரித்­துள்­ளோம்," என்று குறிப்­பிட்­டார் உஷா.

தோழி­க­ளின் 'நிலா நிலா ஓடி வா', 'தோசை அம்மா தோசை' நூல்­கள் இரண்­டும் புதி­தாக பிறந்த குழந்­தை­கள் முதல் சிறு­வர்­கள் வரை ரசிக்­கக்­கூ­டி­ய­தாக, தமிழ் கற்­பித்­த­லுக்கு உகந்­த­தாக அமை­யும் என்­பது இவர்­க­ளின் நம்­பிக்கை.

இவர்­க­ளின் புத்­தக உரு­வாக்­கத் திட்­டத்­தில் சக தமி­ழர்­களை ஈடு­ப­டுத்த வேண்­டும் என்­பது இவர்­க­ளின் இன்­னொரு முயற்சி. கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழல் கார­ணத்­தால் சீனா­வில் தங்­க­ளின் புத்­த­கங்­களை அச்­சி­டும் நிலை ஏற்­பட்­டது.

இருப்­பி­னும், புத்­த­கத்­தின் படங்­களை வரை­ப­வர் இந்­தி­ய­ராக இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக அவர்­கள் தங்­கள் 'இன்ஸ்­ட­கி­ராம்' மூலம் முயன்று அத்­த­கைய நிபு­ணர்­க­ளைக் கண்­டும் பிடித்­த­னர்.

இந்த வகை­யில் உஷா, ரஸ்­மியா இரு­வ­ரும் தங்­க­ளின் இரு புத்­த­கத் தலைப்­பி­லும் ஆயி­ரம் பிரதி­களை அச்­சிட்­ட­னர்.

2020ஆம் ஆண்டு டிசம்­பர் 21ஆம் தேதி­யன்று தொடங்­கிய இவர்­க­ளின் நூல் உரு­வாக்­கத் திட்­டம், அதே நாள் 2021ல் நிறை­வேறி­யது.

இணை­யம் வழி­யாக புத்­த­கங்­களை விற்­கும் இவர்­கள், அடுத்து சமூ­கப் பிரச்­சி­னை­களை எவ்­வாறு குழந்­தை­கள் புத்­த­கத்­தில் ஆரா­ய­லாம் என்­பதை ஆராய்ந்து வரு­கின்­ற­னர்.

சிறு வயது முதல் தமி­ழில் வாசிப்­ப­தற்­கான வாய்ப்­பைப் பிள்­ளை­களும் அவர்­க­ளின் பெற்­றோ­ரும் நழு­வ­வி­டக்­கூ­டாது என்­பதே இந்த இளம் தாய்­மார்­க­ளின் விருப்­ப­மா­கும்.

நூல்­களை வாங்க விரும்புவோர் www.chellameybooks.com என்ற இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!