தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதைக்களத்தில் மாணவர்களின் சிறுகதை ஆராய்ச்சி

2 mins read
31018bce-476e-43a8-b0f4-be3e9bcde4d4
சிறுகதைகளைப் பற்றி கதைக்களத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் சிறப்பாகப் பேசினர். செய்தி, படம்: ஏற்பாட்டுக் குழு -

புத்­தாண்­டின் முதல் கதைக்­க­ளம், மாண­வர்­க­ளின் படைப்­பாற்­றலை ஒட்டி அமைந்­தது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற கதைக் களத்­தில் சிங்­கப்­பூர் சிறு­க­தை­களை ஆரா­யும் அங்­கம் முதல் முறை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த அங்­கத்தை ஆண்­டர்­சன் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் வழி­ந­டத்­தி­னர். எழுத்­தா­ளர் சித்­து­ராஜ் பொன்­ரா­ஜின் 'தர்ம ரதம்' என்ற சிறு­கதை, முனை­வர் மா. இரா­ஜிக்­கண்ணு எழு­திய 'கண்ணே' என்ற சிறு­கதை ஆகிய இரண்­டை­யும் மாண­வர்­கள் தேர்ந்­தெ­டுத்­தி­ருந்­த­னர்.

கதை­களில் கையா­ளப்­பட்ட மொழி, உத்­தி­கள், கதை முடிவு மற்­றும் கதை கூறும் கருத்து போன்­ற­வற்றை மாண­வர்­கள் திற­மை­யா­கப் பகுத்­தா­ராய்ந்­த­னர்.

கலந்­து­கொண்ட மாண­வர்­கள் அனை­வ­ரும் ஆங்­கி­லச் சொற்­கள் இல்­லா­மல் தமி­ழில் உரை­யா­டி­னார்­கள்.

எழுத்­தா­ளர் சந்­திப்பு அங்­கத்­தில் 'படைப்­பாக்க அனு­ப­வத்­திற்கு எழுத்தே தேவை­யில்லை' என்ற தலைப்­பில் எழுத்­தா­ளர் ஜெயந்தி சங்­கர் உரை­யாற்­றி­னார்.

படைப்­பாற்­றல் என்­ப­தும் எழுத்து என்­ப­தும் ஒன்­றல்ல என்­றார். ஒரு படைப்­பில் தேய் வழக்கு­ க­ளைத் தவிர்ப்­ப­தன் முக்­கி­யத்­து­வம், குறிப்­பாக பயன்­ப­டுத்­திய சொற்­க­ளை­யும் உவ­மை­க­ளை­யும் மீண்­டும் மீண்­டும் பயன்­ப­டுத்­தாமல் புதிய சொற்­க­ளைப் பயன்­படுத்­து­வது வாச­கர்­க­ளின் ஆர்­வத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள உத­வும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

நமக்­குள் எழும் எண்­ணற்ற கேள்­வி­களை, சமூ­க சிந்­த­னை, சிக்­கல்­கள் ஆகியவற்றை மன­திற்­குள் முத­லில் அசை­போட்டு, நிதா­ன­மாக எழு­தப்­படும் படைப்­பு ­கள் சிறப்பு என்­றார்.

உரை­யா­ட­லின்­போது, தமி­ழு­டன் தமது இரு­பது ஆண்டுகாலப் பய­ணம்­தான் ஆங்­கி­லத்­தி­லும் தற்­போது சிறப்­பான படைப்­பு­களை எழு­து­வ­தற்­குத் தமக்­குத் துணை­பு­ரி­வ­தா­கக் கூறி­னார்.

இந்­தி­யா­வில் செயல்­படும் 'டெல்லி வையர்' இணை­யத்­த­ளம் நடத்­திய ஆய்­வில் 2021ல் வெளி­யான ஆங்­கில நூல்­க­ளி­லி­ருந்து ஐம்­பது சிறந்த எழுத்­தா­ளர்­க­ளின் பெயர்ப் பட்­டி­ய­லில் எழுத்­தா­ளர் ஜெயந்தி சங்­க­ரும் இடம்­பெற்­றி­ருப்­பது சிங்­கப்­பூ­ருக்­கும் எழுத்­தா­ளர் கழ­கத்­திற்­கும் பெருமை சேர்ப்­ப­தா­கும் என்று சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் திரு நா.ஆண்­டி­யப்­பன் குறிப்­பிட்­டார்.

திரு­வாட்டி ஜெயந்­தி­யின் 'தபுலா ரோஸா' (Tabula Rosa) என்ற ஆங்­கில நூலைச் சிறந்த நூல்­களில் ஒன்­றாக அந்த இணை­யத்­த­ளம் தேர்வு செய்­தது.

சிறந்த படைப்­பு­களை எழு­து­வ­தற்­குத் தொடர் வாசிப்பு மிக முக்­கி­யம் என்­றும் பரி­சு­க­ளுக்கு என்­றில்­லா­மல் பயிற்­சி­க­ளுக்­கா­கத் தொடர்ந்து எழு­து­ப­வர்­க­ளின் படைப்­பு­கள் பண்­படும் என்­றும் திரு ஆண்­டி­யப்­பன் கூறி­னார்.

முத்­த­மிழ் விழா பற்­றிய அறி­விப்­பு­கள் விரை­வில் வெளி­யி­டப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார். போட்­டி­களில் குறிப்­பாக மாண­வர்­கள் பங்­கேற்க முன்­வர வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.