$8.6 மில்லியன் குலுக்கல்: பரிசுச் சீட்டு வாங்க சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் நீண்ட வரிசை

$8.6 மில்லியன் குலுக்கல்: பரிசுச் சீட்டு வாங்க சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் நீண்ட வரிசை

1 mins read
0e8bae7b-2c1e-4529-9d3f-e8300538c0fb
ஹவ்காங் ஸ்திரீட் 61ல் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கிளைக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளின் முன்னால் வாரயிறுதி நாள்களிலும் இன்று திங்கட்கிழமையும் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

$8.6 மில்லியன் 'டோட்டோ ஜாக்பாட்' பரிசுக்கான சீட்டைப் பெற ஏராளமானோர் அந்தக் கடைகளின் முன்னால் வரிசைபிடித்து நின்றிருந்தனர்.

வெள்ளிக்கிழமை $5 மில்லியன் புத்தாண்டு சிறப்பு டோட்டோ குலுக்கல் நடைபெற்றபோது யாருக்கும் பரிசு கிடைக்கவில்லை.

அதனால் அந்தத் தொகை இன்றைய தேதிக்கு $8.6 மில்லியனாக அறிவிக்கப்பட்டது.

ஹவ்காங் அவென்யூ 3 மற்றும் ஹவ்காங் ஸ்திரீட் 61 ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரு சிங்கப்பூர் பூல்ஸ் கிடைகளுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் இன்று ெசன்றிருந்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது 30 முதல் 80 பேர் வரை ஒவ்வொரு கடையின் முன்பும் வரிசையாக நின்றிருந்ததை அவர் கண்டார்.

கொவிட்-19 விதிமுறை கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக ஒரு மீட்டர் இடைவெளியில் மஞ்சள் நாடா கட்டப்பட்டு இருந்தது.

-

அருகிலிருந்த வீவக புளோக்குகள் வரை வரிசை நீண்டதால் போதுமான மஞ்சள் நாடா இல்லை.

இருப்பினும், வரிசையில் நின்றிருந்தோர் தாங்களாகவே ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்றனர்.

இந்த வரிசைகளில் இளையர் முதல் மூத்தோர் வரை பல வயதுப் பிரிவினரும் நின்றிருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் கண்டார்.

Watch on YouTube